Announcement

Collapse
No announcement yet.

விமான ரகசியங்கள்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • விமான ரகசியங்கள்!

    விமான ரகசியங்கள்!
    பெரிய நிறுவனம் என்றால் ஒஸ்தியா?
    மிகப் பெரிய நிறுவனத்தின் விமானத்தில் செல்லும்போது பைலட்டும் நல்ல அனுபவம் பெற்றவாராக இருப்பார் என்று நினைத்துவிட வேண்டாம். அவர்கள் உள் ஒப்பந்தத்தில் உள்ளூரைச் சேர்ந்த கற்றுக்குட்டி பைலட்டைக் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்துவதும் நடக்ககூடியதே! அதிக நேரம் ஓட்டினால் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்பதால், அந்தப் பைலட்டுகள் மெதுவாகவே ஓட்டுவதும் உண்டு.
    ஹெட் போன் கதையும் அதுதான் !
    விமானத்தில் ஏறியதும் தரப்படும் ஹெட்போன்கள் புதிதல்ல. ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதை ஒவ்வொரு பயணத்தின்போதும் துடைத்து புதிய கவரில் போட்டு புதிதுபோலத் தருவார்கள்.
    சுத்தம் சுகாதாரம் எப்படி?
    தலையணை, போர்வைகளை எல்லா நேரமும் துவைத்து, காயவைத்து எடுத்துத்தருவார்கள் என்று நினைக்க வேண்டாம். ஒரு பயணம் முடிந்ததும் அப்படியே பதவிசாக மடித்து எடுத்துவைப்பார்கள். கேட்கும்போது புன்சிரிப்போடு தருவார்கள். நாமும் சுகந்தமான வாசனையில் மனதைப் பறிகொடுத்து வாங்கிக்கொள்வோம். வாசனை பணிப்பெண்ணிடமிருந்து வந்தது என்று நமக்குத் தெரியாது! மிகப் பெரிய நகரில் காலையில் புறப்படும் முதல் விமானத்தில் மட்டுமே உண்மையில் துவைத்து சுத்தப்படுத்திய போர்வைகள், தலையணைகள் ஏற்றப்படும். அதேபோல, உங்கள் சீட்டின் முன்னால் இருக்கும் ட்ரே பரிசுத்தமானது என்று நினைத்து, அதில் வேர்க்கடலை, பொரித்த வற்றல்- வடாமெல்லாம் வைத்துச் சாப்பிடாதீர்கள். உங்களுக்கு முன்னால் பயணம் செய்த தம்பதியின் குழந்தை அதில் 'சூச்சா' போய் காய்ந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
    -- ஜூரி. (கருத்துப் பேழை ).
    -- 'தி இந்து' நாளிதழ், திங்கள், ஜூன் 9, 2014.
    Posted by க. சந்தானம்
Working...
X