Announcement

Collapse
No announcement yet.

படித்ததில் பிடித்தது

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • படித்ததில் பிடித்தது

    Blessings with akshada
    இப்போதெல்லாம் ஒரு 'கூத்தை' ஆயுஷ்யஹோமம்,சீமந்தம், உபநயனம், கல்யாணம், சஷ்டியப்தபூர்த்தி போன்ற சுப மங்கள கார்யங்களில் கவணிக்கின்றேன். நீங்களும் கவணித்திருப்பீர்களே.


    மங்கள கார்யம் நடந்துக்கொண்டிருக்கும்போது நடுவில்
    காபி, டீ, அல்லது ஜூஸ் போன்றவைகளை ஒன்றை
    கப்பில் தருவார்கள். இவர்கள் எச்சல் பண்ணி சாப்பிட ஆரம்பிப்பார்கள்.. அந்த சமயம் பார்த்து ஆசிர்வாதம் செய்வதற்கு அக்ஷதை கையில் வரும். அதே எச்ச கையுடன் அந்த அக்ஷதையை வாங்கிக்கொண்டு ஆசிர்வாதம் செய்வார்கள். இது அனாச்சாரம் அல்லவா.? ஆகாத காரியம் அல்லவா இது.


    எச்ச கையுடன் அக்ஷதையை அல்லது புஷ்பத்தை வாங்கலாமா? ஆசிர்வாதம் செய்யலாமா? தெரிய வேண்டாமா? கையை அலம்பிக்கொண்டு வந்தால் என்ன?


    அலக்ஷிய மனப்பான்மையும், தான் என்ன செய்கின்றோம் என்று கொஞ்சம்கூட தெரியாததும்தான் காரணம்.


    சொல்லித்தான் வருகின்றேன்:
    Of course, நான் ப்ரதானமாக செல்லும் கார்யங்களில் இவற்றை எடுத்து சொல்லித்தான் வருகின்றேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எனது சில உபன்யாசங்களிலும் ஞாபகப்படுத்த தவறுவதில்லை.
Working...
X