Announcement

Collapse
No announcement yet.

Dont tell reasons to be SAD

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Dont tell reasons to be SAD

    காரணம் சொல்லாதே !


    || ராதேக்ருஷ்ணா ||


    பக்தி செய்யாமலிருக்க காரணம் சொல்லாதே !


    உலகில் காரணம் சொன்னவர்கள் ஜெயித்ததில்லை !


    நீ சொல்கின்ற காரணங்களில் பல பக்தர்கள்
    வாழ்விலும் இருந்தது !


    அவர்கள் அதையும் தாண்டித்தான் பக்தி செய்தார்கள் !


    நீயும் அவர்களைப் போல் முயற்சித்துப் பார் !


    தகப்பன் கொடுமைக்காரனா ?
    ப்ரஹ்லாதனைப் போல் பக்தி செய் !


    தாயால் கெட்ட பெயரா ?
    பரதனைப் போல் பக்தி செய் !


    அண்ணனே உன்னை அவமதிக்கிறானா ?
    தியாகராஜரைப் போல் பக்தி செய் !


    குடும்பத்தில் தரித்ரம் தலைவிரித்தாடுகிறதா ?
    குசேலரைப் போல் பக்தி செய் !


    மனைவி அடங்காப் பிடாரியா ?
    சந்த் துகாராமைப் போல் பக்தி செய் !


    கணவன் கொலைகாரப் பாவியா ?
    மீராவைப் போல் பக்தி செய் !


    புகுந்த வீட்டில் கொடுமையா ?
    சக்குபாயைப் போல் பக்தி செய் !


    பெற்ற பிள்ளையை இழந்துவிட்டாயா ?
    பூந்தானத்தைப் போல் பக்தி செய் !


    பெற்ற தாயை சிறுவயதில் இழந்துவிட்டாயா ?
    நாரதரைப் போல் பக்தி செய் !


    நீ வேலைக்காரி பெற்ற பிள்ளையா ?
    விதுரரைப் போல் பக்தி செய் !


    நீ தப்பான குடும்பத்தில் பிறந்தவளா ?
    கானோ பாத்ராவைப் போல் பக்தி செய் !


    உடலில் வியாதியால் வேதனையா ?
    நாராயண பட்டத்ரியைப் போல் பக்தி செய் !


    யாராவது கை கால்களை வெட்டிவிட்டார்களா ?
    ஜயதேவரைப் போல் பக்தி செய் !


    இளம் விதவையாய் குழந்தைகளுக்காக வாழ்கிறாயா ?
    குந்திதேவியைப் போல் பக்தி செய் !


    மனைவியை இழந்து குழந்தைகளோடு வாழ்கிறாயா ?
    மாதவேந்திரபுரியைப் போல் பக்தி செய் !


    சொந்தக்காரர்களே உன் குடும்பத்தை ஏமாற்றிவிட்டார்களா ?
    பாண்டவர்களைப் போல் பக்தி செய் !


    உடன் பிறந்த தம்பியே உனக்கு விரோதியா ?
    ஜயமல்லரைப் போல் பக்தி செய் !


    பெற்ற குழந்தையே உன்னை கேவலமாக நடத்துகிறதா ?
    கைகேயியைப் போல் பக்தி செய் !


    உன் குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லையா ?
    நம்மாழ்வாரின் தாயார் உடையநங்கையப் போல் பக்தி செய் !

    குடும்பத்தினர் யாரும் ஆதரிக்கவில்லையா ?
    வால்மீகியைப் போல் பக்தி செய் !


    கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்கின்றாயா ?
    பீஷ்மரைப் போல் பக்தி செய் !


    உன் கணவன் கஞ்சனா ?
    புரந்தரரின் மனைவி லக்ஷ்மியைப் போல் பக்தி செய் !


    வியாபாரத்தில் நஷ்டமா ?
    சாருகாதாஸரைப் போல் பக்தி செய் !


    உன் கணவன் நாஸ்திகனா ?
    மண்டோதரியைப் போல் பக்தி செய் !


    உன் கணவன் சன்னியாசியாகிவிட்டாரா ?
    விஷ்ணுப்ரியாதேவியைப் போல் பக்தி செய் !


    கணவன் உன்னை கண்டு கொள்வதில்லையா ?
    சுநீதியைப் போல் பக்தி செய் !


    குடும்பத்தினர் உன்னை ஒதுக்கிவிட்டார்களா ?
    ஜடபரதரைப் போல் பக்தி செய் !


    நீ வேலை பார்க்கும் இடத்தில் தொந்தரவா ?
    அக்ரூரரைப் போல் பக்தி செய் !


    ஊரே உன்னை ஒதுக்கிவிட்டதா ?
    சோகாமேளரைப் போல் பக்தி செய் !


    சுகமாக வாழ்ந்து இப்பொழுது கஷ்டமா ?
    ரந்திதேவரைப் போல் பக்தி செய் !


    உனக்கு குழந்தை பாக்கியம் இல்லையா ?
    யசோதையைப் போல் பக்தி செய் !


    பிறந்த குழந்தைகள் எதுவும் தங்கவில்லையா ?
    தேவகியைப் போல் பக்தி செய் !


    அறிவு ஒன்றும் இல்லாத முட்டாளா ?
    கோபர்கள், கோபிகைகள் போல் பக்தி செய் !


    பிறவிக் குருடனா ?
    சூர்தாஸரைப் போல் பக்தி செய் !


    உடல் ஊனமுற்றவரா ?
    கூர்மதாஸரைப் போல் பக்தி செய் !


    நீ ப்ருஹந்நிலை போல் அரவாணியா ?
    சுஹக்ஷாவைப் போல் பக்தி செய் !


    நீ பிச்சை எடுத்து வாழ்கின்றாயா ?
    பந்து மஹாந்தியைப் போல் பக்தி செய் !


    உலகிற்கு நல்லது செய்தும் அவமரியாதையா ?
    பத்ராசல ராமதாசரைப் போல் பக்தி செய் !


    வாழ்க்கையே பிரச்சனையா ?
    மஹாராஜா ஸ்வாதித்திருநாளைப்
    போல் பக்தி செய் !


    இன்னும் பலகோடி பக்தர்கள் உண்டு !
    பக்தி ஒன்று தான் உன் வாழ்க்கைக்கு
    என்றும் ஒரே ஆதாரம் !


    அதை செய்யாமல் நீ எதைச் செய்தாலும்
    உனக்கு சமாதானம் இல்லை !


    இதுவரை காரணம் சொல்லி உன் ஆனந்தத்தை
    நீ தொலைத்தது போதாதோ ?


    இனிமேல் காரணம் சொல்லாதே !
Working...
X