Announcement

Collapse
No announcement yet.

Money

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Money

    courtesy:Sri.Mayavaram Guru
    உலகத்தில் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் பொதுவா இரண்டே பிரச்சனைகள்தான். ஒண்ணு பணத்துக்கு என்ன பண்றது? அடுத்து, வந்த பணத்தை என்ன பண்றது?


    பணம் வருவதற்கு என்ன செய்யலாம் என்பது பலரது பிரச்சனை..
    வந்த பணத்தை என்ன செய்யலாம்? எப்படி தக்க வைக்கலாம் என்பது சிலரது பிரச்சனை...


    லக்ஷ்மி குபேர பூஜை செய்யலாம். இதைவிட சுலபமான வழி ஒன்றை பிரம்மஸ்ரீ தாமோதர தீட்சிதர் என்பவர் சொல்லுகிறார்.


    16 அருகம்புல்லை எடுத்து, தண்ணீர் தெளித்து, (அலம்பக்கூடாது) அதனை, செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வீட்டில் தவறாமல் விநாயகருக்கு சுமுகாய நாம.. : முதலான அவரின் 16 நாமங்கலான சொல்லி விடாமல் மூன்று செய்து வந்தால், எப்படிப்பட்ட தரித்தரனும் செல்வந்தனாகி விட தானே வழி வரச் செய்துடுவான் கணநாதன் என்று அடித்துச் சொல்லுகிறார். ஆனால், இதற்கு, முழு நம்பிக்கை அவசியம் வேண்டும். சிறிய சந்தேகம் கூட கூடாது.


    அதெப்படி பணம் வரும் என்றால், பணம் வரும் வழியை ஏதேனும் ஒரு தொழில், வேலை என்று எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் காட்டுவான்.. இன்னதென்று சொல்ல முடியாது. தானே பணம் வந்துடாது. முதலில் நம்பிக்கை, பிறகு பூஜை பிறகு இறைவன் ஏதோ ஒரு ரூபத்தில் காட்டும் வழியில் விடா முயற்சி செய்தால், பலன் நிச்சயம்.


    .சரி. பணம் வந்தாகி விட்டது... அல்லது பணம் வந்த வீட்டில் பணம் தங்கவதே இல்லை. செலவழிந்துகொண்டே போகிறது என்பார்கள் பலரும்.இதை நாம் கேட்டு இருப்போம்.அப்படி வந்த பணம் அல்லது இருக்கும் பணம் முறையாக சேமித்து, செலவழிக்கும் வழியையும் அவனே காட்டுவான். இதற்கு ஒரே வழி வெறும் எளிமையானது. பூஜை என்று எதுவும் பண்ண வேண்டாம்,


    நாம் பொதுவாக முன் காலத்தில் அல்லது இப்பவும் ஊர்க்காரங்க இப்படி சொல்லக் கேட்டு இருப்போம். என்ன அது?


    ஏண்டா ? தண்ணியை இப்படி கொட்டறே? பணமே தங்காது என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டு இருப்போம். வேறு மாதிரி சிலர் சொல்லுவார்கள். அவன் பணத்தை தண்ணியா செலவு பண்றான் பாரு.. என்பார்கள்.


    இதற்கு என்ன அர்த்தம்? நன்றாக யோசியுங்கள். இந்து மதத்தில், எல்லாமே அர்த்தம் பல பொதிந்தவை. எதையும் நம் பெரியோர்கள் காரணமாகவே சொல்லி இருப்பதைப் பார்த்தால், ஆச்சரியமாகவே இருக்கிறது.


    பணத்துக்கும் - ஜலத்துக்கும் தலைவன் வருணன். குபேரன் பணத்துக்கு அதிபதி. ஆனால், தலைவன் -அதிபதி இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.


    மழை வேண்டி, வருணனை நாம் வேண்டுகிறோம் அல்லவா !!! அவனே, தண்ணீருக்கும் தலைவன். வருணனுடைய திசை மேற்கு. அதனால், குளிக்கும்போதோ, காலில் ஜலம் விழும்போதோ, மேற்கு நோக்கி நின்றுகொண்டு, உபயோகித்தாலே போதும், நம்மிடம் உள்ள பணம் விரையம் ஆகாது. அனாவசிய செலவுகள் ஏற்படாது.


    தண்ணீரை வீணாக்கினால், பணம் தங்காது என்று சொல்லக் கேட்டு இருக்கோம் அல்லவா !!! தண்ணீருக்கு தலைவனான வருணன், தண்ணீரை வீணாக்குவது கண்டால்,செல்வமும் தங்காது செய்துவிடுவான். நோய் நொடி வரும்., விபத்து வரலாம். அதனால், எதிர்பாராத செலவுகள் வரலாம்.தண்ணீரை சிக்கனமாக செல்வழிப்பவர்களைக் கண்டு வருணன், மகிழ்ச்சி அடைந்து, அவனிடமே செல்வம் தங்க வழி கோலுவான்.


    இதை எப்படி நிரூபிப்பது? அதையும் சொல்லுகிறேன்.


    வருடத்தில் 12 மாதங்களில், எல்லா மாதங்களும் மழை பெய்கிறதா? ஏதோ 2 - 3 மாதங்களில் மட்டும்தானே பெய்கிறது. அதை, அணை,ஆறு, ஏரி, குளம், கிணறு, குட்டை போன்ற நீர் நிலைகளில் தேக்கி, அந்த நீரைக் கொண்டு, வருடத்தின் மிச்ச நாட்களை ஓட்டுகிறோம் ! அதேபோலத்தான், ஒரு குறிப்பட்ட காலத்தில் மட்டும்தான் பணம் வரும். அதை முறையாக சேமித்து, செலவழித்தால், மீதிக் காலத்துக்கு சிரமம் இருக்காதல்லவா !!!


    ஆனால், இப்போது என்ன செய்கிறோம்? ஏரி, குளம், குட்டை எல்லாவற்றையுமே ஆக்கிரமித்து, கட்டிடம் கட்டி விட்டோம். சேமிக்க தண்ணீருக்கு வழி இல்லை. அதனால், மழை பெய்த சில காலத்திலேயே, வறட்சி ஏற்பட்டுவிடுவதை காணுகிறோம். அதனால், விவசாயம் குறைய, பஞ்சம் ஏற்பட, தேவை அதிகரிக்க, விலைவாசி ஏற, செலவு கூட, பணத்தை அதிகம் செலவழிக்க வேண்டி வருகிறது அல்லவா!!!


    ஏன் - சமீபத்தில் 2015 டிசம்பரில் பெய்த வரலாறு காணாத மழை நீரை சேமிக்காமல், அதை வீணடித்தோம். காரணம், ஏரி, குளம், குட்டை எல்லாவற்றையும் ஆக்கிரமித்து விட்டோம். இப்போது அல்லல்படுகிறோம். ஆக, தண்ணீருக்கும்-பணத்துக்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும் என்பது இப்போது புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.


    மரங்களை வெட்டி .சாய்த்துவிட்டோம், காடுகளை காணாமல் செய்துவிட்டோம், அதனால், இனி மாதம் மும்மாரி பெய்வது பழங்கதை. மும்மாரி பெய்தபோது, வளம் இருந்தது, செல்வமும் சேர்ந்தது.


    தண்ணீருக்குப் பஞ்சமில்லை அப்போது. பணம் தங்கியது.
    வறட்சிக்குப் பஞ்சமில்லை இப்போது. பணமும் தண்ணீருக்குப் பதில் செலவழிக்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம். ஆக, தண்ணீருக்கும், பணத்துக்கும் தலைவனான வருணனை நினைத்து, தண்ணீரை, குளிக்கும்போதும், கால் அலம்பும் (கழுவும்) போது, அதை மேற்கு நோக்கி செய்து, நீரை சிக்கனமாக பயன்படுத்தி வந்தால், சேர்ந்த செல்வம் விரையமாகது, தங்கும்.


    இனியாவது, இருக்கிற மரங்களை வெட்டாமல்,புதுக் கன்றுகளை நடுவோம்., இருக்கிற ஏரி - குளம்- குட்டை - கண்மாய்களை அடைக்காமல், நீரை சேமிப்போம். பணம் சேர, வளமுடன் வாழ்வோம்.
Working...
X