Announcement

Collapse
No announcement yet.

Jnani

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Jnani

    Courtesy: Smt.Uma Balasubramanian
    ஞானி

    ஞானியும் சாதாரண மனிதன்தான் என்றாலும் அவனது வாழ்வு சிறப்பாக அமையும் என்ற கருத்தை யோக வசிஷ்ட சாரம் என்ற நூலின் மூலம் அறியலாம்.
    சாந்தோகிய உபநிஷத மந்திரம் (8.1.6) ' அவன் அனைத்து உலகங்களில் இருந்தும் விடுதலை பெற்றவன்' என்று கூறுகிறது. இதே கருத்தைத்தான் வசிஷ்டர் ஸ்ரீ ராமனுக்கு செய்த உபதேசங்களில் விளக்குகிறார்.

    1.18 பல வருட வாழ்க்கையின் அனுபவங்களைச் சில நிமிடங்கலே நீடிக்கும் கனவில் நாம் அனுபவிப்பது போலத்தான் , மாயையின் விளையாட்டாக இந்த வாழ்வு அமைந்துள்ளது. என்பது பொருந்தும்.

    1.19 இந்த வாழ்வை அனுபவிப்பவனாக இல்லாமல் வெறும் பார்வையாளானாக இருக்கும் ஞானியின் மனம் எப்போதும் அமைதியுடன் இருக்கும். அவன் பந்தங்களில் இருந்து முழுதும் விடுதலை அடைந்தவனாகக் கருதப் படுகிறான்.

    1.20 ஏற்பது , மறுப்பது ஆகிய இரண்டையும் துறந்து, 'நான் உணர்வு மயமானவன்' என்பதை உணர்ந்த ஞானியின் வாழ்வு சிறப்பாக அமையும்.

    1.23 எந்த இடத்திலும் எதுவும் எப்போதும் பிறப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை. பரமன் மட்டுமே அனைத்து உருவங்களாகவும் காட்சி அளிக்கிறான். என்பதை அறிதல் வேண்டும் .

    2.11 துன்பத்தைத் தருவதாகத் தோன்றும் பிரபஞ்சம் , பரமனின் விளையாட்டு. . கயிறு பாம்பாகத் தோன்றுவதுபோல் உருவாக்கப்பட்ட இந்த உலகம் சரியான ஞானம் கிட்டியதும் மறைந்து விடும்.

    2.12 உலகத்துக்கு நம்மைப் பந்தப்படுத்தும் சக்தி இல்லாவிட்டாலும் கூட, ஆசைகள் நம்மை பந்தப்படுத்திவிடுகின்றன. ஆசைகள் அற்றவன், பந்தங்களில் இருந்து விடுதலை பெற்றவனாவான்.

    2.15 சிறுவனின் கற்பனையில் உருவான பேய் அவனையே பயமுறுத்துவது போல அறியாமையால் உருவான உலகம், ஞானம் இல்லாதவர்களைத் துன்புறுத்துகிறது.

    2.18 குருடனுக்கு இருளாக இருக்கும் உலகம், கண் இருப்பவனுக்கு ஒளியுடன் காட்சி தருவது போல அஞ்ஞானிகளுக்குத் துன்பம் தரும் உலகம், ஞானியின் பார்வையில் இன்பம் நிறைந்ததாகக் காட்சி அளிக்கும்.

    2.19 உலகத் துன்பங்களை மனதின் கற்பனையாக அறிந்த ஞானியின் ஆனந்தம் தொடர்ந்து அதிகரிக்கொண்டே இருக்கும் .

    2.21 சூரியனின் கதிர்கள் சூரியனிடம் இருந்து வேறுபட்டவை அல்ல என்பதை அறிந்தவர்கள் போல மனதில் தோன்றும் எண்ணங்கள் இறைவனிடம் இருந்து வேறுபட்டவை அல்ல என்று அறிந்த ஞானிகள் எப்போதும் மகிழ்ந்திருப்பார்கள்.

    2.22 துணியை ஆராய்ந்தவர்கள் அது நூலில் இருந்து தோன்றியது என்பதை அறிவார்கள். அதுபோல இந்த உலகம் பரம் பொருளான இறைவனிடமிருந்து தோன்றியது என்பதை ஞானிகள் அறிவார்கள்.

    2.24 நுரை, அலை, நீர்த் திவிலைகள், நீர்க்குமிழிகள் ஆகிய அனைத்தும் கடலில் அடங்கிவிடுகிறது. அதுபோல பரமனிடம் இருந்து வெளியான இந்தப் பிரபஞ்சம், தன்னில் அடக்கம் என்பதை ஞானிகள் அறிவார்கள்.

    3.1 காய்ந்த புல்லை நெருப்பு எரிப்பதுபோல இந்த ஞானத்தை அடைந்தவர்களின் அறிவு, அவர்களின் ஆசைகளை எரித்து அகற்றிவிடும். இதுதான் உண்மையான சமாதி; கண்களை மூடித் தியானம் செய்வது அல்ல.

    3.3 அனைத்தையும் கடந்த நிலையை அடைந்த ஞானியின் மனம், முழு நிலவைப்போல் எப்போதும் குளிர்ந்து இருக்கும்.

    3.5 பறவைகளும் மிருகங்களும் , தீப்பற்றி எரியும் காட்டுக்குள் சரணடைவதில்லை. அது போல பரமனை அறிந்த ஞானியின் மனதினுள் தீய எண்ணங்கள் புகுவதில்லை.

    3.8 சுற்றியுள்ள பொருள்களின் நிறம், ஸ்படிகக்கல் மேல் பட்டுப் பிரதிபலித்தாலும் அதன் மேல் கறை படிவதில்லை. அது போல உலகில் ஞானி எந்தச் செயலில் இறங்கினாலும் தான் செய்த செயல்களால் அவன் பாதிக்கப்படுவதில்லை.

    3.9 வெளி உலகில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தாலும் ஞானியின் உள்மனம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல் அமைதியாக இருக்கும்.

    3.10 இருப்பது பரமன் மட்டுமே என்ற அறிவில் நிலைபெற்ற ஞானி,வெளி உலகில் தங்கள் வேலைகளைத் தொடர்ந்து செய்தாலும் அது வெறும் கனவு உலகம் என்பதை அறிவார்கள்.

    3.11 சேற்றில் புதைந்து இருந்தாலும் தங்கத்தின் பளபளப்புக் குறைவதில்லை. அது போல மரணம் எப்போது ஏற்பட்டாலும் ஞானி அதனால் பாதிக்கப்படுவதில்லை.

    3.12 ஞானம் பெற்ற அன்றே அவன் முக்தி அடைந்துவிட்ட காரணத்தால், ஞானி காசியில் மடிந்தாலும் அல்லது ஒரு புலையனின் வீட்டில் மடிந்தாலும் வித்தியாசம் ஏதும் இல்லை.

    3.14 காலிப் பாத்திரம் கடலினுள் நிரம்பியும், வெளியே காலியாகவும் இருப்பது போல சுற்றியுள்ள நிகழ்வுகளுக்கேற்ப ஞானி வெளித்தோற்றத்தில் மாற்றம் அடைந்தாலும் அவன் ஆழ்மனதில் எந்த மாற்றமும் இருக்காது.

    3.16 இருதயத்தில் இருந்த ஆசைகளின் முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட்டபின், மனதில் இருந்த சந்தேகங்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டபின் முக்தி அடைந்த ஞானி வெளிப்பார்வைக்கு பந்தப்பட்டவன் போல காட்சி அளித்தாலும் உண்மையில் அவன் விடுதலைபெற்றவனே.

    3.24 முக்தி என்பது வானத்துக்கு மறுபுறம் இருப்பதல்ல. மனதில் உள்ள ஆசைகள் சரியான ஞானத்தால் சுட்டெரிக்கப்பட்ட நிலையேயாகும்

    4.1 இரண்டற்ற உணர்வு தன் கற்பனையில் ஆசைப்படுபவனாகவும் ஆசைப்படும் பொருளாகவும் பிரிந்து ஒன்றை ஒன்று தேடி அலையும்பொழுது அதற்கு மனம் என்று பெயர்.

    4.3 நெருப்பு எரிவதற்குக் காரணமான காற்றே அதை அணைக்கவும் உதவுவது போல் கற்பனையில் உருவான துன்பங்கள் கற்பனையாலேயே நீக்கப்பட வேண்டும்.

    4.7 இது வேண்டும், அது வேண்டாம் என்று பிரிப்பதுதான் பந்தமே தவிர வேறு ஒன்றும் இல்லை.

    4.9 பார்க்கப்படும் பொருள்கள் உண்மையில் இருப்பதாகத் தோன்றுவதற்கு மனதின் கற்பனை மட்டுமே காரணம். உலகம் உண்மையில் இல்லை.

    4.23 நான் பரமன் அல்ல என்ற எண்ணம் துன்பங்களுக்குக் காரணம். . நான் பரமன் என்ற எண்ணம் முக்திக்குக் காரணம்.

    5.2 படத்தில் வரையப்பட்ட கொடிகளைக் காற்றினால் அசைக்க முடியாது. அதுபோல் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களால் சரியான ஞானத்தில் நிலைபெற்றவனின் மனதை பாதிக்க முடியாது.

    5.3 'நான் யார்?' என்ற ஆராய்ச்சி செய்தால் அறிய வேண்டியது அனைத்தையும் அறிந்து விடலாம்.

    8.6 அறிவு உன்னில் இருந்து வேறுபட்டதல்ல. அறியப்படும் பொருள்கள் அறிவில் இருந்து வேறுபட்டவை அல்ல. அதாவது, உன்னைத்தவிர வேறு எதுவும் உண்மையில் இல்லை.என்பதுதான் உண்மை.

    8.7 பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் போன்றவர்கள் செய்யும் செயல்கள் யாவும் பரமனான உன்னால் செய்யப்படுபவை.

    8.8 'நானே இந்தப் பிரபஞ்சம். நான் மாறாத பரமன். எனக்கு அப்பாற்பட்ட கடந்த காலமோ எதிர்காலமோ கிடையாது'
Working...
X