Marriage showdown
Courtesy:Sri.Sarma Sastrigal
கல்யாணம் என்று வந்து விட்டால் எல்லா இல்லங்களிலும் தற்காலத்தில் உடனே என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை ஞாபகத்திற்கு கொண்டுவந்து பட்டியல் போடுவார்கள். திட்டமிடுவார்கள். இதில் தவறில்லை. ஆனால் இதில் நடக்கும் 'தமாஷ்'களை என்னவென்று சொல்லுவது?
ஒன்றிரண்டை மாத்திரம் இங்கு பார்ப்போம்.
பத்திரிகை:
இவர்கள் பத்திரிகை டிசைன் செய்யும் போக்கை பார்த்தால் இவர்கள் ஏதோ நமது கலாசாரத்தில் மிகவும் ச்ரத்தை உள்ளவர்கள் போல தோன்றும். நாம் அசந்து போய்விடுவோம். கஷ்டப்பட்டு வாசகங்களையும் விவாஹ மந்திர அர்த்தங்கள் அடங்கிய 'கொடேஷன்களும்' உள்ள பத்திரிகையின் 'டிசைனை' தேர்ந்தெடுப்பார்கள்.
ஆனால் யதார்த்தத்தில் கல்யாணத்திற்கு வரும்போதுதான் சாயம் வெளுக்கும். பத்திரிக்கையில் போட்டுள்ள எந்த சடங்கையும், மந்திரத்தையும் கண்டுக் கொள்ளவே மாட்டார்கள். அந்த சிந்தனை துளியும் இருக்காது.
எல்லாம் ஃபேஷனுக்காகவும் மற்றவர்களை 'இம்ப்ரெஸ்' செய்வதற்க்காகத்தான் என்று சுலபமாக புரிந்துக் கொள்ளலாம்.
நமது கலாச்சாரத்திற்கும் கல்யாணத்தன்று மண்டபத்தில் காணும் காட்சிகளுக்கும் பொதுவாக சம்பந்தமே இருக்காது.
தலைவிரிக்கோலம்:
உதாரணத்திற்கு ஒன்றை மாத்திரம் இங்கு எடுத்து சொல்லுகிறேன். தலை விரிக்கோலத்தோடு 'பாலிகை' தெளிக்கும் கன்றாவியை என்னவென்று சொல்லுவது. முன்பெல்லாம் மடிசார் இல்லை என்றாலேயே பெண்கள் பாலிகையை தெளிக்க வருவதற்கு கூச்சப்படுவார்கள். பிறகு குறைந்தது 6 கஜ புடவையாவது இருந்தால் போது என்றாகிவிட்டது. இப்போது எப்படியும் இருக்கலாம் என்று ஆகி விட்டது.
விவாஹம் முடிந்ததும் தம்பதிகளுக்கு கடைசியில் ஆரத்தி எடுக்கும் பெண்கள்கூட இப்போதெல்லாம் தலை விரிக்கோலத்தோடு எடுக்கத் தயங்குவதில்லை. இதெல்லாம் ஆகவே ஆகாது. அபர கார்யத்தில்தான் (செத்த வீட்டில்தான்) தலைவிரிக் கோலத்துடன் ஸ்த்ரீகள் சில விஷயங்களை செய்யச் சொல்லியுள்ளது.
உணவு வகைகளும் மற்ற விஷயங்களும்:
அடுத்தது உணவு விஷயத்துக்கு வருவோம். வந்தவர்களை உபசரிக்க வேண்டும் என்பதில் இரு கருத்து இருக்க முடியுமா; இருக்க முடியாதுதான். அதற்காக இன்று பலர் அடிக்கும் கூத்து இருக்கின்றதே அதை என்னவென்று சொல்லுவது? மாலை ரிசப்ஷன் சாப்பாட்டில் எக்கச்சக்கமான கணக்கற்ற அயிட்டங்களை சேர்ப்பார்கள். அங்கு வீணடிக்கும் பொருட்களின் எண்ணிக்கையையும். அளவையும் பார்த்தால் பல கேள்விகள் மனதில் தோன்றுவது இயற்கைதான்.
எல்லாமே இரண்டு மூன்று மணி நேர கூத்துக்காக. கேட்டால் வருபவர்களை அசத்த என்று பதில் வரும்.
மெஹந்தி மற்றும் சங்கீத்:
இந்த 'மெஹந்தி-மற்றும் சங்கீத் ப்ரோக்ராம்' எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை; இதற்கு ஆகும் பட்ஜெட்டை கேட்டால் தலையை சுற்றும்.
வைதீக கார்யங்கள் 'கடனே' என்றுதான் நடக்கும். மற்ற விஷயங்களுக்கு தருகிற முக்கியத்துவத்தில் இதில் ஒரு சிறு துளிதான் 'இண்ட்ரெஸ்ட்' இருக்கும்.
நமக்கு விதிக்கப்பட்டுள்ள சம்ஸ்காரங்களில் விவாஹம் ஒன்று என்று சிந்தனை இருக்க வேண்டாமா? இதை ஒரு "சோஷல் ஃபங்ஷனாக" மாத்திரம் பார்க்காமல் கூடியமானவரையில் சாஸ்த்ரோக்தமாக நடத்த எண்ண வேண்டாமா?
ஒரு சிலர் இன்னும் இருக்கத்தான் இருக்கிறார்கள்:
இரண்டு நாள் கல்யாணமோ அல்லது நாலு நாள் கல்யாணமோ முடிந்தவரையில் விதிப்படி விவாஹத்தில் வைதீக கார்யங்களை ஆசாரத்துடன் நடத்துவதில் ஆங்காங்கு ஒரு சிலர் விடாப்பிடியாக இருந்து வருகின்றதையும் நாம் பார்த்து வருகிறோம்.
இவர்களது எண்ணிக்கை பெருக பகவானை ப்ரார்த்திப்போம்.