Announcement

Collapse
No announcement yet.

கோ ஸம்ரக்ஷணம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கோ ஸம்ரக்ஷணம்

    (Discourse delivered by Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Sankaracharya Swamigal of Kanchi Kamakoti Peetham in Sri Ekamreswara Temple Street in Gujaratipet, Chennai)


    கோ ஸம்ரக்ஷணம்
    (12-1-1933)
    கோ ஸம்ரக்ஷணம் என்பது லோகத்தில் எல்லா ஜாதியார்களாலும் செய்யக்கூடிய தர்மம். நாலு வர்ணத்தாரும் இதர ஜாதியார்களும் செய்யக்கூடிய தர்மம். நம்முடைய இந்து மதஸ்தர்களைத் தவிர பௌத்தர்களும் ஜைனர்களும் கோ ஸம்ரக்ஷணம் செய்கிறார்கள். கோவானது லோகத்திற்கே தாயாக இருக்கிறது. கோவைத் தவிர பாக்கிப் ப்ராணிகளில் எல்லாம் அவற்றின் சிசுக்களுக்கு மாத்திரம் பால் கொடுத்து ரக்ஷிக்கின்றன. அதுவும் கொஞ்ச காலத்திற்குத்தான். பசுவோ எந்த ஜாதிக்கும் ஆயுள் உள்ளவரையில் பால் கொடுத்து ரக்ஷிக்கிறது. இதையெல்லாம் உத்தேசித்துதான் சாஸ்திரங்களில் கோவை ரக்ஷிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறது. வேத சம்பந்தமான எல்லா கிரியைகளிலும் “கோப்ராம்மணேப்ய சுபமஸ்து நித்யம்” என்று சொல்லுவது வழக்கம். இந்த வாக்கியத்தில் பசுவைத்தான் முதன்மையாகச் சொல்லியிருக்கிறது. கோக்களும் பிராம்மணர்களும் எப்பொழுதும் மங்களமாய்யிருகட்டும் என்பது அர்த்தம். பசுவத் தான் முதன்மையாகச் சொல்லியிருக்கிற்து. பசு ஸௌக்கியமாயிருந்தால் லோகமே அதனால் ஸௌக்கியமடையும். பசுவினால் சகல ஜனங்களும் ஸௌக்கியமடைகிறார்கள் என்பதினால் தான் கோபூஜையைப் பிரதானமாகச் சொல்லியிருக்கிறது. கன்று தன் தாயின் பாலைக் குடித்த பிறகு மற்ற ஜனங்களுக்கும் கொடிக்கும்படியாக அவ்வளவு க்ஷீரவிருத்தி பசுவுக்கு இருக்கிறது. மற்றெந்தப் பிராணிகளுக்கும் இந்த குணம் கிடையாது. மதுரையில் வைதிக மதத்துக்கு விரோதமாகச் சமணர்களின் உபத்திரவம் அதிகமாக இருந்த காலத்தில் பாண்டிய ராஜாவின் மந்திரியான குலச்சிலையார் என்றவரும், அரசனுடைய பட்டமஹிஷியாகிய மங்கையர்க்கரசியார் என்ற உத்தமியும் சமண மதத்தினறும் வைதிக ஸமயத்தைக் காப்பாற்ற வேண்டுமென்று திருஞானசம்பந்த மூர்த்திகளைப் பிரார்த்தித்தனர். அப்போழுது சமணர்களுக்கும் திருஞான்சம்பந்த மூர்த்திக்கும் அநேக விவாதங்கள் ஏற்பட்டுச் சமணர்களுடைய கொள்கைகள் நிலைக்காததினால் அவர்கள் தோல்வியுற்றனர். கடைசியில் ஒரு பிரதிஜ்ஞை செய்து கொண்டார்கள். அதில் வைதிக ஸமயம்தான் உண்மை என்றும், சமண ஸமயம்தான் உண்மை என்றும் தனித்தனி ஓலையில் எழுதி வைகையாற்றின் பிரவாஹத்தில் விடுவது. அதில் எது பிரவாஹத்தை எதிர்த்துச் செல்லுகிறதோ அதுதான் உண்மையான மதமென்று முடிவுசெய்து கொண்டார்கள். அந்த ஓலையில் திருஞானசம்பந்தர் வாழ்த்துப் பதிகம் என்றதை எழுதினார். அதாவது “வாழ்க அந்தணர் வானவர் ஆன் இனம்” என்றதை முதலடியாகக் கொண்ட பதிகம். திருஞானசம்பந்த மூர்த்திகள் எழுதிய ஓலை பிரவாஹத்தை எதிர்த்துப் பத்து மைல் தூரத்திலுள்ள “திருவேடகம்” என்ற சிவஸ்தலத்தை அடைந்தது. அந்த ஸ்தலத்திலிருக்கிற பரமேஸ்வரனுக்கு “பத்திரிகாபரமேஸ்வரன்” என்று ஸம்ஸ்கிருதத்தில் பெயர். பத்திரிக்கை என்றால் ஏடு என்று அர்த்தம். ஏடு அங்கு தங்கியதால் சுவாமிக்கு அப்பெயர் இடப்பெற்றது.

    அப்பகதிகத்தில் “ஆனினம் வாழ்க” என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனினம் என்றால் பசுக்கூட்டம் என்று பொருள். அதாவது பசுக்கூட்டம் வாழ்க என்று சொல்லப்பட்டிருக்கிறது. பசு இவ்வளவு பெருமை வாய்ந்துருப்பதினால் யாவரும் அதை பூஜிப்பது அவசியம். தருமங்களைப் பொதுவாக எல்லோரும் அனுசரித்தாலும் விசேஷித்த ஒரு ஜாதியார் அவசியம் செய்யவேண்டியது ஒன்றொன்றிருக்கிறது. வைசியர்கள் செய்யவேண்டிய தருமத்தை பகவான் கீதாசாரியரான ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் ஒரு சுலோகத்தினால் சொல்லியிருக்கிறார். (அதாவது ’கிருஷிகோரக்ஷவாணிஜ்யம் வைச்யகர்ம ஸ்வபாவஜம்’) வைசியர்களுக்கு முக்கியமாக இந்த மூன்று காரியங்கள் சொல்லியிருக்கிறார். கிருஷி என்றால் பூமியை வைத்துக் கொண்டு உழுது சாகுபடி செய்து ஜனங்களுக்கு உபயோகப்படுத்தவேண்டியது. அடுத்த்து பசுவை ஸம்ரக்ஷிக்க வேண்டியது. முன்றாவது வியாபாரங்களினால் பொது ஜனங்களுக்கு உபகாரம் செய்யவேண்டியது. அதாவது வியவசாயத்தை விருத்தி செய்து அதனால் மற்ற ஜீவராசிகளுக்கு உபகாரம் செய்யவேண்டியது வைசிய தருமம். பசுவை நன்றாக ஸம்ரக்ஷணை செய்து அதன் கன்றுக்குக் கண்டு பாக்கியுள்ள பாலை ஜனங்களுக்கு உபயோகப் படுத்துமாறு அவ்வளவு நன்றாக புஷ்டியாகப் பசுவை ஸம்ரக்ஷிப்பது ஒரு முக்கிய தருமம். வியாபாரமானது வைசியர்களுக்கு ஒரு முக்கியமான தருமம். அதாவது வெகு தூரமான தேசங்களில் விளையும் கோதுமை, பெருங்காயம் முதலியன போன்ற சாமான்களை ஓர் இடத்தில் சேகரித்து ஜனங்களுக்கு விற்று உபகாரம் செய்வதே ஒரு தருமம். ஒரு மனிதனுக்கு லக்ஷக்கணக்காக பணம் இருந்தும் பயிர் முதலியவை இல்லாத பாலைவனத்தில் உட்கார்ந்ருகொண்டிருந்தால், இந்தப் பணத்தைக்கொண்டு மாத்திரம் அவன் ஜீவிக்க முடியாது. அதேமாதிரி நெல் ஏராளமாக விளையும் தேசத்தில் நெல்லை மாத்திரம் வைத்துக்கொண்டு மற்றவை இல்லாமல் ஜீவிக்க முடியாது. ஆகையால் பல இடங்களிலிருந்து அங்கங்கே விளையும் தானியங்களைச் சேகரித்து ஓர் இடத்தில் ஜனங்களுக்கு விற்று உபகாரம் செய்வதுதான் வியாபாரம். இது வைசியருக்கு முக்கிய தருமமாக ஏற்பட்டிருக்கிறது. வைசியர்கள் நமக்கு வியாபாரம் வேண்டாமென்றிருப்பது பாபம். அதே மாதிரி ஒரு பிராமணன் ஸம்ஸாரத்தை விட்டுவிட்டு அரண்யத்தில் ஸ்ந்நியாயிருந்துகொண்டு பணம் ஸம்பாதித்தால் அதுவும் பாபம். வியாபாரத்தை அவரவர்கள் லாபத்தை உத்தேசித்து செய்கிறார்கள் என்று நினைக்க்கூடாது. ஏனென்றால் ஒரு ஸமயம் ஒரு வாரம் ஹர்த்தால் (hartal) ஏற்பட்டுக் கடைகள் யாவும் மூடப்பட்டிருந்தால் அப்பொழுது ஒரு ஸாமானும் கிடைக்கப்பெறாமல் ஜனங்கள் படும் சிரமம் சொல்ல முடியாது. ஆகையால் வியாபாரம் பொதுப் பிரயோஜனத்தை உத்தேசித்த்தே தவிர சொந்தப் பிரயோஜனத்தை உத்தேசித்த்தல்ல; ஆகையால் வைசியர்கள் வியாபாரத்தைத் தங்கள் லாபத்துக்காகச் செய்கிறோமென்று எண்ணாமல் பகவானால் ஏற்படுத்தப்பட்ட ஒரு காரியத்தைத் தாம் செய்கிறோமென்று நினைத்து பகவானை நினைத்துக் கொண்டு நடத்த வேண்டியது. எதற்காக இன்றைய தினம் கோபூஜையைப் பற்றிச் சொன்னேனென்றால் நாளைய தினம் கோபூஜை செய்யவேண்டிய தினமாகையாலும் அதிகமான் ஆஸ்திக வைசியர்கள் கூடியிருப்பதனாலும் நான் சொன்னேன். ஆகையால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணன் சொன்னபடி நாம் நமது தருமத்தைச் செய்யவேண்டியது. ஆகையால் ஜனங்களும் ஆஸ்திகர்களான வியாபாரிகளிடம் வியாபாரம் செய்யவேண்டியது. அப்பொழுதுதான் அந்த லாபம் தருமத்திற்கு உபயோகப்படும். நாஸ்திகர்களிடத்தில் வியாபாரம் செய்யக்கூடாது. செய்தால் அந்த லாபம் வேறு வழியில் செலவழியும். வியாபாரமானது வைசியர்களுக்கு விசேஷ தர்மமாக ஏற்பட்டிருகிறது. ஆகையால் பகவானால் ஏற்படுத்தப்பட்ட வியவஸாயம், கோரக்ஷணம், வாணிஜ்யம் என்ற மூன்று காருயங்களையும் ஈசுவர பக்தியுடன் செய்து பகவானுடைய கிருபைக்குப் பாத்திரராக வேண்டும்.


    *சென்னை குஜராத்திப்பேட்டை ஶ்ரீ ஏகாம்ரேசுவரர் கோயில் தெருவில் செய்யப்பட்ட உபன்யாஸம்.
Working...
X