Announcement

Collapse
No announcement yet.

9 thoughts

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 9 thoughts

    Courtesy:Sri.JK.Sivan
    ஒரு நவரத்ன விஷயம்


    ஒரு ஒன்பது (நவரத்ன) விஷயங்கள் நம்மை இன்று நெருங்கியிருக்கிறதே. அவை என்ன வென்று பார்க்கவேண்டாமா, படிக்க வேண்டாமா, புரிந்து கொள்ள வேண்டாமா, புரிந்துகொண்டால் மட்டும் போதவே போதாதே. விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டு பின்பற்றவேண்டும்.
    இப்படி செய்தால் என்னய்யா பயன்?
    பயனா? அனுபவித்துப்பார் உனக்கே தெரியும் புரியும்.மீதி பேருக்கும் நீயே ஓடிப்போய் சொல்வாய்.


    1. பிரார்த்தனை, ப்ரேயர் என்றெல்லாம் சொல்கிறோமே. அதனால் என்ன பிரயோசனம்?

    அது காரில் இருக்கும் ஸ்பேர் சக்ரம், ஸ்டெப்னி மாதிரி. நடுரோடில் ஈ காக்கா இல்லாத இடத்தில் 108 டிகிரி வெயிலில் நமது கார் புஸ் என்று நின்றுவிட்டால் பங்க்சர் ஆன சக்கரத்தை மாற்றி அங்கிருந்து ஓட உதவுகிறதே ஸ்டெப்னி , அதுபோல் பிரார்த்தனை நமக்கு கஷ்டம் எப்போது வருகிறதோ அப்போது உதவுவது மட்டுமல்ல. காரை சரியான வழியில் ஓட்டுவதற்கு, செல்ல, உதவும் ஸ்டீரிங் வீல் மாதிரியும் கூட. நம்மை சரியான பாதையில் வாழ்க்கைப் பயணத்தில் செலுத்த உதவுவது கடவுளை நோக்கி நாம் செலுத்துகிற பிரார்த்தனை தான், சரியா?


    2. காரில் நமக்கு முன்னாலே இருக்கும் கண்ணாடி பெரியதாகவும் பின்னால் இருக்கும் கண்ணாடி சிறியதாகவும் இருக்கிறதே, அதே போல் தான் வாழ்க்கைப் பயணத்தில் எதிர்காலம் என்பது நமக்கு முன்னால் இருக்கும் கண்ணாடி. நம் கவனம் அதில் தான் இருக்க வேண்டும். கடந்தகாலம் தான் பின்னாலே இருக்கும் கண்ணாடி. அந்த கண்ணாடி எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்க அத்தனை முக்கியம் அல்ல. தேவைப்பட்டால் மட்டுமே திரும்பிப் பார்க்கத்தான்.


    3. மற்றவர்களோடு வைத்துக்கொண்டிருக்கும் நட்பு என்பது ஒரு புத்தகம் மாதிரி. அரை நிமிஷத்தில் ஒரு நெருப்புக்குச்சி போதும் அதை எரித்து அழிக்க, ஆனால் எத்தனை காலம் தேவையாக இருந்திருக்கும் அந்த புத்தகத்தை எழுத. கவனத்தோடு நட்பை போற்றி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் .


    4. கொஞ்சம் சமயோசிதமாக வாழ்க்கையை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. எதுவுமே சாஸ்வதமில்லை. எனவே ஏதேனும் கொஞ்சம் திருப்தியாக நடந்தால் உடனே சந்தோஷத்தோடு வரவேற்று வந்தபோது அதை கெட்டியாக பிடித்துக்கொள். விட்டால் அது விரைவில் மறைந்து விடும். அதே போல் நினைத்தபடி, எதிர்பார்த்ததுபோல் சில காரியங்கள் நடக்கவில்லை என்றால் தலையைக் கையில் ஏந்த வேண்டாம். கவலையை விடு. அதுவும் ரொம்ப நாள் ஓடாது. விரைவில் நல்ல திருப்பத்தைத் தரும்.


    5. ஒரு அழகான பொன் மொழியை நினைவு கூறுவோமா? பழைய நண்பர்கள் தங்கம் போன்றவர்கள். அப்பப்போ, புதிசு புதிசாக நாம் பிடித்துக் கொள்ளும் நண்பர்கள் வைரங்கள் என்று தோன்றட்டுமே. வைரங்கள் இருந்தாலும் அதைச் சுற்றி கெட்டியாக பிடிமானமாக இருக்க தங்கம் தான் தேவைப்படுகிறது. வைரத் தோடு, வைர மோதிரம், வைர மூக்குத்தி வெறும் வைரத்திலா போட்டுக்கொள்ள முடிகிறது. அதை ஆபரணமாகக் கட்ட ஒரு தங்கக் கம்பியாவது தேவை. இல்லையா?


    6. '' போச்சு, எல்லாமே போச்சு'' என்று இடிந்து போய் உட்காருகிறோமே , சில சமயம். நம்பிக்கை நம்மை விட்டுப்போனதால் பயம் வந்து ஒட்டிக்கொள்கிறது. அப்போது தான் கடவுள் மீது நமக்கு நம்பிக்கை இருந்தால் அவன் நமக்கு ஆறுதல் சொல்வது உள்ளே கேட்கும். ''ஹே அசடே, உன் முன்னே தோன்றுவது பாதையின் முடிவு அல்ல, ஒரு வளைவு தானே ஏன் பதற்றம்? வளைவைக் கடந்து எதிரே பார். நேர் பாதை தெரியும்''


    7. கடவுளைப் பற்றி சொல்லும்போது இன்னொன்று நினைவில் கொள்ளவேண்டும். நீ ரொம்ப கஷ்டப்படும் வேளையில் உன் கஷ்டம் கடவுளை நம்பியதால் தீர்ந்து விடுகிறது. அப்போது க''டவுளே என்னே உனது சக்தி'' என்று புகழ்கிறாய். அவனது சக்தி மேல் அபார நம்பிக்கை வைக்கிறாய். ஒரு வேளை நீ வேண்டியும் கடவுள் உன்னை உன் கஷ்டத்திலிருந்து மீட்க உதவவில்லை என்று தோன்றினால் என்ன புரிந்து கொள்ள வேண்டும் தெரியுமா?. ''உன் கஷ்டத்திலிருந்து மீண்டுகொள்ள உனக்கே தேவையான சக்தி அவன் கொடுத்திருப்பதால் அவனது சக்தி தேவையில்லை என்று கடவுள் உன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறானென்று''.


    8. பிரார்த்தனை என்று பேசுகிறோமே அதில் அமிர்தம் போல ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளவேண்டும். நீ பிறர்க்காக பிரார்த்தனை பண்ணும்போது கடவுள் உன் பிரார்த்தனையினால் உனக்காக அவர்களை ரக்ஷிக்கிறான். அதே போல்தான் நீ சந்தோஷமாக, நலமோடு வாழும் வேளையில் உனக்காக யாரோ, எங்கோ எப்போவோ கடவுளைப் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள் என்று கடவுளுக்கும் அவர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும். ''லோகா சமஸ்தா சுகினோ பவந்து'' வை நமது முன்னோர்கள் இதற்காகவே அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள்.


    9. எதற்கெடுத்தாலும் ஒரு கவலை, மன வியாகூலம் வேண்டாமே. நாளைக்கு வரப்போகிறது என்று அஞ்சும் ப்ராப்ளத்தை இத்தகைய கவலை தீர்க்கப்போவதில்லையே. ஆனால் என்ன செய்யும் தெரியுமா? கொஞ்ச நஞ்சம் இன்றிருக்கும் மன அமைதியை நிச்சயம் சாப்பிட்டு விடும்.
Working...
X