Announcement

Collapse
No announcement yet.

பசுமைத் திருமணம் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பசுமைத் திருமணம் !

    பசுமைத் திருமணம் !
    சுற்றுச்சூழல் போற்றும் பசுமைத் திருமணங்கள் !
    காந்திய பொருளாதாரத்தின் மற்றொரு வடிவம்.
    கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து ஆடம்பர திருமணங்கள் அரங்கேறிவரும் நிலையில் காந்திய பொருளாதாரத்தின் அடிப்படையில் பசுமைத் திருமணங்களை நடத்தி வருகிறார் கடலூர் மாவட்டம் தொழுதூரைச் சேர்ந்த ரமேஷ் கருப்பையா.
    பாரம்பரிய இயற்கை விருந்து !
    பசுமைத் திருமணங்கள் பெரும்பாலும் கிராமங்களிலேயே நடத்தப்படுகின்றன. பாரம்பரிய சிறு தானியங்கள் மற்றும் இயற்கை விவசாய வகை உணவுகலே விருந்தாக வழங்கப்படுகின்றது. காலை விருந்தாக தேன், தினைமாவு, உருண்டை, முக்கனிகள், வரகு அரிசி பொங்கல், நவ தானிய அடை, நாட்டுக் காய்கறி அவியல், கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், இளநீர், சுக்குமல்லி தேநீர், பனை வெல்ல பானகம், நொங்கு வழங்குகிறார்கள். மதியம் சிகப்பு அரிசி சாதம், நாட்டு காய்கறிகள் குழம்பு, கம்பு தயிர் சாதம், கடைந்த கீரை, அவியல், துவையல், பனை வெல்லம் பருப்பு பாயசம் வழங்கப்படுகிறது. சமையலுக்கு எண்ணெய் கிடையாது. பெரும்பாலும் கிராம நீர்நிலைகளின் நீரையே இயற்கை முறையில் சுத்திகரித்து குடிநீராக பரிமாறுகிறார்கள்.
    -- டி.எஸ். சஞ்சீவிகுமார். பூச்செண்டு.
    -- ' தி இந்து ' நாளிதழ். புதன், டிசம்பர் 25, 2013.
    Posted by க. சந்தானம்
Working...
X