Announcement

Collapse
No announcement yet.

Success

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Success

    வெற்றியின் மனமே…
    ஒரு ஜப்பானியக் கதை.
    ஒரு டீ மாஸ்டரம், ராணுவ சிப்பாயும் சேர்ந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
    போகும் வழியெல்லாம் சிப்பாய்க்கு நிறைய மரியாதை. பார்ப்போரெல்லாம் கும்பிட்டனர். இருந்துக்கு அழைத்தனர். நடக்கின்ற வழியில் ஒதுங்கி நின்று வழி விட்டனர். இப்படி சகலவித உபசரிப்புகளும் நடந்துகொண்டேயிருந்தன.
    இதைப் பார்த்த டீ மாஸ்டருக்கு ஒரு நப்பாசை. சிப்பாய்க்கு கிடைக்கிற மரியாதை தமக்கும் கிடைக்கட்டுமே என நினைத்தான். ஒரு சிற்றூரில் இரவு தங்கினார்கள்.
    சிப்பாய் தூங்கியதும் அவருடைய ராணுவ சீருடையை போட்டுக் கொண்டு கையில் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஊருக்குள் நடந்தான்.
    அவனுக்கும் அதே உபசரிப்பு கிடைத்தது. மனதிற்கு படுகுஷி.
    அந்த ஊரில் மற்றொரு வில்லன் சிப்பாயைப் போல வேஷமிட்டு ஊரை மிரட்டிக் கொண்டிருந்தான்.
    வில்லனுக்கு ராணுவ சிப்பாயின் வரவு தெரியவே, அவனை சண்டையிட்டு கோழையென நிரூபித்து அவமானப்படுத்த திட்டமிட்டுத் தேடி வந்தான்.
    சிப்பாய் வேடத்திலிருந்த டீ மாஸ்டரைப் பார்த்தான். "நாளை எனக்கும் உனக்கும் போட்டி நடத்தலாம்; யார் வீரன் என்று இந்த ஊரயறியட்டும்" என்றான்.
    டீ மாஸ்டருக்கு பயத்தில் நடுக்கமே வந்துவிட்டது. தங்கியிருந்த இடத்திற்கு உடனே திரும்பினான். சிப்பாயை எழுப்பி நடந்த உண்மையச் சொன்னான்.
    சிப்பாயும் அனை மன்னித்து விட்டு சொன்னான் "நான் உன் தவறை மன்னித்து விடுகிறேன்; ஆனால் நீ அந்த வில்லனை சந்தித்தே ஆக வேண்டும். எப்போதும் நீ நீயாக இரு. உன்னுடைய திறமைகளையெல்லாம் இயன்றவரை வெளிப்படுத்து. போலியாக எதையும் செய்யாதே".
    அடுத்த நாள் வில்லனும் வந்தான். வில்லனைப் பார்த்ததும் டீ மாஸ்டருக்குள் பயம் வந்து விட்டது. "போட்டியை தொடங்குமுன், இருவரும் ஒரு டீ சாப்பிடுவோம்" என்று சொல்லிவிட்டு டீயை போட ஆரம்பித்தான்.
    நல்ல ருசியான, சூடான டீயை வில்லனிடம் நீட்டினான். அதுவரை அவன் டீ தயாரிக்க பாய்லரை கொதிக்க வைத்த முறை டீயில் அளவை கலக்கிய வேகம், ஒரு சொட்டுகூட கீழே கொட்டாமல் கலந்த விதம், அதை ருசிக்கும்போது உண்டான திருப்தி போன்றவைகளை உணர்ந்த் வில்லனுக்கு மனதிற்குள் ஒரு கேள்வி.
    "ஒரு சாதாரண டீயை இந்த அளவு கவனத்துடன் செய்கின்ற இவன், சண்டையில் எவ்வளவு நுணுக்கத்தை அறிந்திருப்பானோ" என்று நினைத்தான். தன்னுடைய துப்பாக்கி மற்றும் ராணுவ உடையைக் கழற்றி டீ மாஸ்டரின் காலடியில் வைத்து தன்னை மன்னித்து விடுமாறு வேண்டினான். தான் ஊரை விட்டே வெளியேறுவதாகவும் உறுதி சொன்னான்.
    மனச்சுமை இறங்இய டீ மாஸ்டர், வில்லனை மன்னித்தான்.
    வில்லன் போனதும் நன்றியோடு ராணுவ சிப்பாயைப்பார்த்து "நானாக நான் செயல்படவேண்டும் என எனக்கு ணர்த்தி, என்னையே எனக்கு அடையாளம் காட்டியமைக்கு நன்றி" எனக்கூறி வணங்கி நின்றான்.
    இனி விவாத்த்திற்கு வருவோம்.
    நமது ஆசைகள் எப்படி?
    நிறைய பணம் வேண்டும்! உயர்ந்த பதவி வேண்டும்! சொத்துக்கள் நிறைய வேண்டும். உலகமே பாராட்டும் புகழ் வேண்டும்.
    இதற்காக செயல்படும்போது என்னாகிறது? "பணத்தை எப்படியாவது சேர்ப்போமே" என்று பலர் மனதிற்கு உடனபாடில்லாத செயல்களைச் செய்கிறார்கள்.
    "மற்றவர்களின் பதவியை அபகரித்தவிட" நினைத்து பல தவறுகளுக்கு உடந்தையாகிறார்கள்.
    இதனால் தமக்கு குறுக்கு வழியில் கிடைத்த சொத்துக்களையும், புகழையும் நிலை நிறுத்திக் கொள்ள முடியாமல் மன உளைச்சலில் தவிக்கிறார்கள்.
    சரி, இனி எப்படி செயல்படவேண்டும்?
    அதற்கு பக்த பிரகலாதனின் கதையைப்பார்ப்போம்.
    பிரகலாதனின் பக்தியை உணர்ந்த கடவுள் அவன் முன்னே தன்றி "என்ன வம் வேண்டும்?" என்றார்.
    "உன்னையே எப்போதும் நினைக்கும் (வரம்) மனம் வேண்டும்" என்றான்.
    "சரி அருளினேன். வேறென்ன வேண்டும்" என்றார்.
    "இதைத்தவிர வேறொன்று வேண்டும் என்று நினைக்காத மனம் வேண்டும்" என்றான்.
    அது சரிதான், நமக்கு பொருளலக வாழ்க்கையில் பணம், பதவி, புகழ் தேவைப்படுகிறதே! அதற்கு என்ன செய்வது?
    தகுதி மற்றும் திறமைக்கு அதிகமான பணம், பதவி, புகழ் சொத்து எது வந்தாலும் அதை ஏற்காத மன உறுதி வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் தங்கள் தகுதிக்கு அதிக மான எதையும் ஏற்காத மன உறுதியை பெற வேண்டும். அது தான் ஒரு மனிதனுக்கு உண்மையான வலிமை. அதக்கைய மன வலிமையைப் பெற நம்மையே உயர்ந்த தகுதிக்கு தயார் செய்ய வேண்டும்.
    எந்த வகையான, பதவி, புகழ், சொத்து போன்றவைஇகளில் குறிக்கோளை வைக்கிறோமோ? அதற்கான தகுதியை பெற முதலில் உழைக்க வேண்டும். தகுதியை உயர்த்தும் போது மற்றவைகளெல்லாம் தாமாகவே வந்து சேரும். அப்போது அதை நிலை நிறுத்தப் போராட வேண்டியதில்லை. மற்றவர்களாலும் அதைப் பறிக்க முடியாது. அப்படியே சொத்துக்களை பறித்தாலும் முன்னேற்றத்தை தடுக்க முடியாது.
    எடிசன் உட்பட பல சாதனயாளர்கள் தங்களுடைய எல்லா சொத்துகளும் அழிந்து விட்ட பிறகும் மன உறுதி இழக்காமல் அதைவிட அதிகமாக உயர்ந்ததன் ரகசியம் இதுதான்.
    ஒரு மேதை சொன்னார்.
    "மனிதனே!
    நீ ஒரு மரமாக இல்லையே என்று கவலைப்படாதே. ஒரு புதராக இரு.
    ஒரு புதராக இருக்க இயலாஇடில் ஒரு செடியாகவாவது இரு.
    ஒரு செடியாக இருக்க இயலாவிடில் ஒருபுல்லாகவாவது இரு.
    புல்லாக இருந்து பாதைகளை லங்காரம் எய்தாலே நீ மதிக்கப்படுவாய் அதுவே சிறப்பு.
    "நீ நீயாக இரு.
    உழைப்பையே உயர்வாக நினை.
    திறமையை, தகுதியை வளர்த்துக்கொண்டே இரு.
    எல்லா வெற்றிகளும் உனக்கே."..................
Working...
X