Announcement

Collapse
No announcement yet.

விழிப்புடன் இருங்கள்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • விழிப்புடன் இருங்கள்!

    பைக் வைத்திருப்போர், பெட்ரோல் பங்க்களில், பெட்ரோல் நிரப்பும்போது கவனிப்பது உண்டா? ...
    நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற பெட்ரோல், பைக் டேங்கை நிரப்பும் முன், கையில் உள்ள பெட்ரோல், 'பம்ப் நாக்'கை அழுத்தி விடுவார்.
    நீங்கள், 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடச் சொல்லி இருப்பீர்கள்; பெட்ரோல் நிரப்பும் நபர், 100 ரூபாய் என, பொத்தானை அழுத்தி, பெட்ரோல் போடுவார். மீட்டரில், 90 ரூபாய் நெருங்கும் சமயம் அவர், 'லாக்கை' அழுத்தி, பின் விடுவிப்பார். பின், மெதுவாக பெட்ரோல் இறங்கி 100 ரூபாயை தொடும். இது எல்லோரும் பார்க்கும் விஷயம்தான்.
    இந்த நடவடிக்கையால், ஐந்து ரூபாய் முதல், 10 ரூபாய் வரை மதிப்புள்ள பெட்ரோல், உங்களுக்கு குறைகிறது. எவ்வாறெனில், பெட்ரோல், 'பம்ப் மீட்டர்' ஒரே சீராக இயங்கினால் தான், சரியாக 100 ரூபாய்க்கு என இறங்கும். நடுவில் தடை செய்யப்பட்டு, பின் இயக்கினால், குறைந்த அளவு பெட்ரோல் மட்டுமே கிடைக்கும்.
    இதுபோல் நூதன திருட்டு மூலம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், தினமும், 20 ஆயிரம் ரூபாய் வரை லாபம் அடைகின்றனர். உங்கள் பணத்தை, உங்கள் கண் முன் திருடுவதை பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். தைரியமாக தட்டிக் கேளுங்கள்!
    நுகர்வோரே... ஏமாற தயாராகாதீர்கள்; விழிப்புடன் இருங்கள்!
    -- இது உங்கள் இடம்.
    -- தினமலர் சென்னை ; செவ்வாய் ; 30-6-2015.
    -- இதழ் உதவி: S.B.மாதவன், விருகம்பக்கம். சென்னை .92.
Working...
X