Announcement

Collapse
No announcement yet.

தை பிறந்தால் வழி பிறக்கும்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தை பிறந்தால் வழி பிறக்கும்!

    பொங்கல் திருநாளை, மகர சங்கராந்தியன்று கொண்டாடுகின்றனர். காரணம், அன்று தான், மகர ராசியில் நுழைகிறான் சூரியன். சங்கராந்தியை, சங்+கராந்தி என, பிரித்து பொருள் காண வேண்டும். 'சங்' என்றால், நல்ல முறை; 'கிராந்தி' என்றால், மாறுதல்! கிராந்தி என்ற சொல்லே, கராந்தி என மருவியுள்ளது. 'சங்கராந்தி' என்ற சொல்லுக்கு, நல்ல முறையிலான மாற்றம் என்று பொருள்.பொதுவாக, தை மாதம் முதல் தேதியில், மகர சங்கராந்தி வரும்.

    இந்நாளில், வடதிசை பயணத்தை துவக்குகிறது சூரியன். வடக்கு திசையை, 'குபேர திசை' என்பர். இதனால் தான், தை முதல், ஆனி வரையுள்ள ஆறு மாதங்களை சுப மாதங்களாக கருதி, திருமணம் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகளையும் செய்கிறோம்.

    ஒருசமயம், குந்திபோஜன் என்ற மன்னனின் அரண்மனைக்கு வந்தார் துர்வாச முனிவர். அவர், அங்கு சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். அவருக்கு பணிவிடை செய்ய, தன் மகள் குந்தியை அனுப்பி வைத்தான் குந்திபோஜன்.முனிவருக்கு முறையாக பணிவிடைகளை செய்து, அவரது ஆசியைப் பெற்றாள் குந்தி. முக்காலமும் உணர்ந்த முனிவரான துர்வாசர், வருங்காலத்தில் குந்தியின் கணவன் பாண்டுவுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது என்பதை, தன் ஞான திருஷ்டியால் அறிந்தார். அதனால், மகப்பேறு அளிக்கும், 'புத்திர லாபம்' எனும் மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.

    அந்த மந்திரத்தின் தன்மையை சோதித்துப் பார்க்க விரும்பிய குந்தி, சூரிய பகவானை மனதில் எண்ணி, மந்திரத்தை ஜெபித்தாள். அடுத்த நிமிடம் அவள் முன் தோன்றிய சூரிய பகவான், தன் அம்சமாக ஆண் குழந்தையை, அவளுக்கு அளித்தார். அப்பிள்ளையே கொடை வள்ளல் என்று போற்றப்பட்ட கர்ணன்!

    குழந்தை இல்லாத தம்பதியர், இப்பொங்கல் நாளிலிருந்து அடுத்த பொங்கல் வரை தொடர்ந்து சூரியோதய வேளையில் சூரிய வழிபாடு செய்தால், குழந்தை பிறக்க வாய்ப்புண்டு; இதற்காக விரத நியமங்கள் எதுவும் தேவையில்லை.சூரியனுக்குரிய வாகனம் குதிரை; அதற்கு, 'சப்தா' என்று பெயர். ஏழு குதிரைகள் சூரியனின் தேரை இழுத்துச் செல்கின்றன. மாதம் ஒருமுறை ராசி விட்டு ராசி மாறி சஞ்சாரம் செய்வது சூரியனின் தொழில். இதனாலேயே இவர், குதிரையை வாகனமாகக் கொண்டுள்ளார்.

    சூரியன் ஒவ்வொரு ராசியிலும் நுழையும் நாளே, தமிழ் மாத பிறப்பாக உள்ளது.உலகிலுள்ள உயிர்களுக்கு உணவளிக்கும் கடமை சூரியனிடமே உள்ளது. இதனால் தான், உழவர்கள் அறுவடை முடிந்ததும் கிடைக்கும் முதல் நெல்லை, குத்திய பச்சரிசியால் பொங்கலிட்டு, சூரியனுக்கு படைத்து நன்றி தெரிவிக்கின்றனர்.

    இந்த தை மாதத்தில், சூரிய பகவான் நம் அனைவருக்கும் நல்வழி காட்டட்டும்!

    தி.செல்லப்பா
    Last edited by S Viswanathan; 15-01-16, 10:13.

  • #2
    Re: தை பிறந்தால் வழி பிறக்கும்!

    நல்ல விளக்கம் குழந்தை பாக்கியம் இல்லாதோர்க்கு நல்ல வழிகாட்டல்.வரும் தைப்பொஙகல் திருநாள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் வரம் தரும் திருநாளாக அமையட்டும்

    Comment

    Working...
    X