Announcement

Collapse
No announcement yet.

பொன்மகன்’ வந்தான்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பொன்மகன்’ வந்தான்!

    பெண் குழந்தைகளுக்காகவே கொண்டு வரப்பட்ட செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘இதுபோல் ஆண் பிள்ளைகளுக்கும் ஒரு திட்டம் கொண்டு வாருங்கள்!’ என்று கேட்ட பெற்றோர் நிறைய பேர். அதற்கான பதில்தான் ‘பொன்மகன் பொதுவைப்பு நிதி!’’
    - சென்னை நகர மண்டல அஞ்சலக அதிகாரி மெர்வின் அலெக்ஸாண்டர், தகவலுடன் ஆரம்பித்தார்.
    ‘1968 முதல் இருந்து வரும் ‘பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட்’ திட்டம் குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் சேமிக்கும் வகையிலானது. ஆனால், மக்களுக்கு அதைப் பற்றிய விழிப்பு உணர்வு இல்லை. எனவே, அதையே 4.9.2015-ல் இருந்து ‘பொன்மகன் பொதுவைப்பு நிதி’ என்ற புதுப் பெயருடன், ஆண் பிள்ளைகளுக்கான சேமிப்புத் திட்டமாக ஹைலைட் செய்து கொண்டு வந்திருக்கிறோம். எப்போதும்போல இதில் அனைவரும் சேமிக்கலாம். விதிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை. திட்டத்தின் பெயர் மாற்றத்துக்குப் பின், மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது’’ என்றவர், திட்டங்களின் சிறப்பம்சங்களைச் சொன்னார்.
    ‘‘10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் காப்பாளர் மூலமும், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவும் கணக்கைத் தொடங்கலாம். குறைந்தபட்சமாக 100 ரூபாய் செலுத்தி கணக்கைத் தொடங்கலாம். தொடங்கியதிலிருந்து 15 வருடங்கள் பணம் செலுத்த வேண்டும். குறைந்தபட்ச முதலீடாக 500 ரூபாய், அதிகபட்ச முதலீடாக 1.5 லட்சம் வரை ஒரு நிதியாண்டில் சேமிக்கலாம்.
    இதற்கு 8.7% கூட்டுவட்டி உண்டு. இந்த வட்டிவிகிதம் ஒவ்வொரு நிதியாண்டுக்கும் மாறுதலுக்கு உட்பட்டது.
    செலுத்தும் தொகைக்கு வருமான வரிவிலக்கு உண்டு. கணக்கு துவங்கியத்திலிருந்து, மூன்றாவது நிதியாண்டில் கடன் பெற்றுக்கொள்ளலாம்.
    ஏழாவது நிதியாண்டில் 50% தொகையை பெற்றுக்கொள்ளலாம்.


    ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் செலுத்தினால், 15 வருடங்களில் சேமிப்பு 1.8 லட்சமாக இருக்கும். வட்டியுடன் 3.65 லட்சம் கிடைக்கும். வருடம்தோறும் 1.5 லட்சம் செலுத்தினால், 15 வருடங்களில் சேமிப்பு 22 லட்சத்து 50 ஆயிரமாக இருக்கும். இதற்கு வட்டியோடு 46 லட்சத்து 48 ஆயிரத்து 683 ரூபாய் கிடைக்கும்.
    இப்படி இன்னும் பல ஆச்சர்யங்களும் இந்தத் திட்டத்தில் இருக்கிறது’’ என்ற அலெக்ஸாண்டர்,
    ``என்ன, பொன்மகன்களைப் பெற்றவர் களுக்கு இப்போது திருப்தியா!’’ என்று கேட்டார் சிரித்தபடியே!
Working...
X