Announcement

Collapse
No announcement yet.

காலம் என்னும் அற்புதம் பற்றி முப்பது பொன

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • காலம் என்னும் அற்புதம் பற்றி முப்பது பொன

    காலம் என்னும் அற்புதம் பற்றி முப்பது பொன் மொழிகள்!
    1
    .காலோ ஹி துரதிக்ரம:
    காலத்தை வெல்ல முடியாது –ராமாயணம்
    2
    காலே தத்தம் வரம் ஹ்யால்பம காலே பஹுணாபி கிம் – கதாசரித்சாகர:
    சரியான காலத்தில் உதவி குறைந்தாலும் சிறந்ததே. தேவை இல்லாத காலத்தில் கூடக் கிடைத்தாலும் என்ன பயன்.
    3
    கால சுப்தேசு ஜாகர்தி – சாணக்ய நீதி தர்பண:
    நாம் தூங்கிக்கொண்டிருந்தாலும் காலம் விழித்துக் கொண்டிருக்கிறது
    4
    க: கம் சக்தோ ரக்ஷிதும் ம்ருத்யு காலே ரஜ்ஜுச் சேதே கே கடம் தாரயந்தி – ஸ்வப்ன வாசவ தத்தா
    மரண காலம் வந்துவிட்டால் யார் யாரைக் காப்பாற்ற முடியும்? நைந்து போன கயிற்றில் தொங்கும் (கிணற்றுப்) பானையை யார் (விழாமல்) பிடிக்க முடியும்?
    5
    அபி தன்வந்தரீ வைத்ய: கிம் கரோதி கதாயுஷி – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்
    வயது போனபின்பு தன்வந்த்ரியே வந்து வைத்தியம் செய்தாலும் பயன் என்ன?

    6
    ஆயுர்யாதி க்ஷணே க்ஷணே
    ஒவ்வொரு வினாடியும் ஆயுள் கழிந்து கொண்டே இருக்கிறது!

    7
    காலக் கலயதாம் அஹம் –
    எண்ணக்கூடிய விஷயங்களில் நான் காலமாக இருக்கிறேன்; அஹம் ஏவ அக்ஷய காலோ— அழிவில்லாத/முடிவில்லாத காலம் நானே!–பகவத் கீதை

    8
    அந்ததோ அஸ்மாபி ஜீர்யதி
    பாறையானாலும் இறுதியில் அழிந்து போகும் (மண் ஆகிவிடும்) – சம்ஸ்கிருத பொன்மொழி
    9
    அகாலேதுர்லபோ ம்ருத்யு:, ஸ்த்ரியா வா புருஷச்ய வா—- ராமாயணம்
    ஆண் ஆகட்டும் பெண் ஆகட்டும்—மரணம் என்பது அகாலத்தில் ஏற்படுவது அரிது.

    10
    ஆயுஷ: க்ஷண ஏகோபி சர்வரத்னைர் ந லப்யதே
    நீயதே தத்வ்ருதா யேன ப்ரபாத: சுமஹானஹோ – யோகவாசிஷ்டம்
    எல்லா ரத்னங்களையும் கொடுத்தாலும் ஒரு வினாடி ஆயுளைக் கூட விலைக்கு வாங்க இயலாது. அதை வீணாக்குவது எப்பேற்பட்ட மடமை!
    11
    ஞாலம் கருதினும் கைகூடும் — காலம் கருதி இடத்தாற் செயின் – திருக்குறள் 484
    சமயே ஹி சர்வம் உபகாரி க்ருதம் – சிசுபாலவதம்
    சமயம் அறிந்து செய்வது பலன் தரும்.
    12
    க: காலஸ்ய ந கோசராந்தரகத: — பர்த்ருஹரி
    காலத்தின் பிடியில் சிக்காதவன் யார்?

    13
    கால க்ரீடதி கச்சத்யாயு: – சங்கரரின் மோஹமுத்கரம்
    காலம் விளையாடுகிறது. ஆயுள் போய்க்கொண்டிருக்கிறது
    14
    காலஸ்ய குடிலா கதி: — சுபாஷித ரத்ன பாண்டாகாரம்
    காலத்தினுடைய போக்கு புரிந்துகொள்ள முடியாதது.

    15
    காலோ ந யாதோ வயமேவ யாதா; : — பர்த்ருஹரி
    காலம் செல்லவில்லை; நாம்தான் சென்று கொண்டிருக்கிறோம் (நம் ஆயுள் ஒவ்வொரு நிமிடமும் சென்று கொண்டிருக்கிறது)

    16
    கத: காலோ ந சாயாதி
    கடந்த காலம் திரும்பிவாராது

    17

    கதஸ்ய சோசனம் நாஸ்தி– சுபாஷித ரத்ன பாண்டாகாரம்
    சென்றது இனி மீளாது மூடரே! நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் (பாரதி)
    18
    கதே ஸோகோ ந கர்தவ்யோ பவிஷ்யன்னைவ சிந்தயேத் – சாணக்ய நீதி
    சென்றதனைக் குறித்தல் வேண்டாம்; எதிர்காலத்தை எண்ண வேண்டாம் (நிகழ்காலத்தை பயனளிக்கும் வகையில் செலவிடு))
    19
    ந ஸ்வ: ஸ்வ: உபாசித் கோ ஹி மனுஷ்யஸ்ய ஸ்வோ வேத:– சதபத பிராமணம்
    நாளை நாளை எண்ணாதே! நாளை வீணில் போக்காதே! நாளை நம்முடைய முறையோ; நமனுடைய முறையோ; யார் அறிவார்?

    20
    நசைர் கச்சத்யுபரி ச தசா சக்ர்நேமி க்ரமேன – மேகதுதம்
    வண்டிச் சக்கரம் போன்றதே வாழ்க்கைச் சக்கரம்; மேலும் கீழும் போய்வரும்.
    21
    பவந்த்யுதய காலே ஹி சத் கல்யாண பரம்பரா: — கதா சரித் சாகரம்
    நல்ல காலம் வந்து விட்டால் மங்கள விஷயங்கள் தொடர்ந்து வரும் (தை பிறந்தால் வழி பிறக்கும்)

    22
    விநாச காலே விபரீத புத்தி: — சாணக்ய நீதி தர்ப்பண:
    கெட்ட காலத்தில் புத்தி பேதலிக்கும்.
    23
    சமய ஏவ கரோதி பலாபலம் – சிசுபாலவதம்
    காலமே ஒருவனை பலவானாகவும் பலவீனனாகவும் ஆக்குகிறது
    24
    கொக்கொக்க கூம்பும் பருவத்து (குறள் 490)
    ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவு வாடி இருக்குமாம் கொக்கு (வாக்குண்டாம்-அவ்வையார்)
    உரிய காலம் வரும் வரை கொக்கு போல காத்திரு!
    25
    ஹா ஹந்த சம்ப்ரமதி கதானி தினானி தானி
    அடடா! இதோ இந்த நொடி (இப்பொழுது) சென்று விட்டதே!!!
    (ஒவ்வொரு வினாடியும் வங்கியில் சேமித்த நம் வாழ்நாள் கழிந்து கொண்டே இருக்கிறது. இதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது)

    26
    கால கரோதி கார்யாணி கால ஏவ நிஹந்தி ச
    காலமே எல்லா காரியங்களையும் முடிக்கிறது.
    27
    க்ருத ப்ரயத்னோபி க்ருஹே ந ஜீவதி
    என்ன முயன்றாலும் வீட்டில் வாழமுடியாது (இறுதி நேரம் வந்துவிட்டால்)
    28
    காலோ ஹி பலவத்தர:
    காலம் என்பது வலிமையானது
    29
    கதம் கதம் நைவ து சந்நிவர்ததே
    போனது போனதுதான்; திரும்பிவாராது.
    30
    நஹி ஸ்வமாயுசிசகிதேசகிதே ஜனேஷு
    மனிதர்களில் தன் ஆயுளை அறிந்தவன் எவனும் இல்லை.

    Compiled by London Swaminathan
    Last edited by S Viswanathan; 15-12-15, 05:36.

  • #2
    Re: காலம் என்னும் அற்புதம் பற்றி முப்பது பொ

    A wonderful collection on KALAM. Thanks.
    Varadarajan
    Last edited by R.Varadarajan; 15-12-15, 06:24.

    Comment

    Working...
    X