Announcement

Collapse
No announcement yet.

தெரிந்து கொள்ளுவோம்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தெரிந்து கொள்ளுவோம்!

    தெரிந்து கொள்ளுவோம்!
    * அதிக பிராண வாயு தரும் மரங்களை வளர்த்தால், மனிதகுலத்துக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஒரு வளர்ந்த அரச மரம்
    1,800 கிலோ கரியமில வாயுவை உள் இழுத்து 2,400 கிலோ பிராண வாயுவை வெளியேற்றுகிறது.
    * பூச்சியுண்ணும் ஒரு அபூர்வத் தாவரம் ஏற்காடு மலையில் 38 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வருவது பலருக்கும் தெரியாது.
    * இந்தியாவில் பூச்சி உண்ணும் 19 வகை செடிகள் உள்ளன. மேகாலயா மாநிலத்தின் காசி மலையில் நெப்பந்தசேயி எனும்
    பூச்சி உண்ணும் தாவரம் காணப்படுகிறது. அதனால், நெப்பந்தசேயி காசியானா என்பது தாவரவியல் பெயர். கடல் மட்டத்தில்
    இருந்து 1,000 அடி முதல் 10,000 அடி உயரம் வரையுள்ள பகுதிகளில் வளரக்கூடியது. ஈரமிக்க காடுகள், சதுப்பு நிலங்கள்,
    குட்டை ஓரங்களில் நெப்பந்தசேயி 100 ஆண்டுகள் வரை வாழ்கிறது.
    * பிளாஸ்டிக்கை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், குளமங்கலத்தில் சுற்றுச்சூழலுக்குக் கேடு
    விளைவிக்கும் விதமாக அதிகளவில் குவிந்து ஆண்டுக்கணக்கில் மக்காமல் கிடக்கும் பிளாஸ்டிக் மாலைக்கு தடை விதிக்க
    வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    * கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள வானகம் என்ற பண்ணைத் தோட்டத்தில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடல் அடக்கம் நேற்று 1.1.14 புதன்கிழமை , சித்தர்களின் ஆகம முறைப்படி செய்யப்பட்டது.
    * ராமாயணத்தில் வரும் சத்துருக்னனின் மனைவி பெயர் சுரீதகீர்த்தி.
    -- ' தி இந்து ' நாளிதழ்களில் இருந்து.
Working...
X