Announcement

Collapse
No announcement yet.

‘ஏய் பூச்சாண்டி! இங்க வந்து இவன பிடிச்சிடĮ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ‘ஏய் பூச்சாண்டி! இங்க வந்து இவன பிடிச்சிடĮ

    ‘ஏய் பூச்சாண்டி! இங்க வந்து இவன பிடிச்சிட்டு போ!’

    குழந்தைகள் சேட்டைச் செய்தால் பயமுறுத்துவதற்காக, ‘ஏய் பூச்சாண்டி! இங்க வந்து இவன பிடிச்சிட்டு போ!’ என்று சொல்லியிருப்போம். அல்லது பிறர் சொல்லக் கேட்டிருப்போம். இதைப் போல, குழந்தையை பயமுறுத்த ஒருவர் சொன்ன சொல், அந்தக் குழந்தையின் எதிர்காலத்தைப் பிற்காலத்தில் பெரும் பிரச்சினைக்குரியதாக மாற்றியது. அதை வியாசர் ஒரு கதை வாயிலாக விவரிக்கிறார். அதைப் பார்க்கலாம்.

    ராட்சசனின் காதல்

    பிருகு முனிவர் தன் மனைவியான புலோமையுடன் ஆசிரமம் ஒன்றில் வாழ்ந்து வந்தார். புலோமை ஒரு சுப காலத்தில் கருத்தரித்தாள். நீண்ட காலத்திற்கு பிறகு குழந்தை உருவானதால் தம்பதியர் மகிழ்ச்சியில் திளைத்தனர். அவர்களின் வாழ்க்கை இன்னும் இனிமையாகப் போய்க் கொண்டிருந்தது.

    ஒருநாள், பிருகு முனிவர் குளிப்பதற்காக ஆற்றுக்குச் சென்றிருந்தார். அந்த நேரத்தில், அவர் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தான் ஒரு ராட்சசன். புலோமன் என்னும் பெயரைக் கொண்ட அந்த ராட்சசன், புலோமையின் மீது காதல் கொண்டான். அவளை அடைய நினைத்து, அவள் அருகில் நெருங்கிச் சென்றான்.

    தன்னை நெருங்கி வந்து கொண்டிருக்கும் ராட்சசனின் எண்ண ஓட்டத்தை, ஒரு தவ முனிவரின் மனையாளாக புலோமையால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவனது எண்ணம் புலப்பட்டதும், அதிர்ச்சி அடைந்த புலோமை, ‘ஏ ராட்சசனே! நான் பிருகு முனிவரின் மனைவி. என்னைத் தவறான எண்ணத்தோடு நெருங்காதே. அது உனக்கு நல்லதல்ல!’ என்று எச்சரித்தாள்.

    எனக்கு சொந்தமானவள்

    அதைக் கேட்டு சிரித்த அந்த ராட்சசன், ‘நீ விஷயம் புரியாமல் பேசுகிறாய். பிருகு முனிவருக்கு முன்பாகவே, உன்னை என் மனதில் வரித்து விட்டேன். உன் தந்தையும் உன்னை முதலில் எனக்குத்தான் அளித்தார்’ என்று கூறினான். ஒன்றும் புரியாமல் புலோமை விழிக்க, அந்த ராட்சசன் தொடர்ந்தான்.

    ‘‘உன்னுடைய சிறு வயதில், நீ அடம் பிடிக்கும் போதும், உன் தந்தையின் பேச்சைக் கேட்காத போதும் அவர் என்ன செய்வார் தெரியுமா? ‘ஏ ராட்சசா! இந்த புலோமையைப் பிடித்துக் கொண்டு போ!’ என்று சொல்வார். அவர் காட்டும் திசையில், தூரத்தில் மரத்தின் பின்னால் இருந்து அதைக் கேட்டவன் நான் தான். அப்பொழுது முதலே, உன்னை நான் என் மனைவியாக வரித்து விட்டேன். ஆகவே நீ எனக்கு சொந்தமானவள்’’ என்றான்.

    அதைக் கேட்ட புலோமை தன் இக்கட்டான நிலையை எண்ணி கலங்கினாள். அந்த ராட்சசனிடம், தன்னை விட்டுச் செல்லும்படி மிகுந்த கலக்கத்துடன் வேண்டினாள். ஆனால் ராட்சசனோ விடுவதாக இல்லை.

    இதற்குத் தீர்வுதான் என்ன என்று யோசித்த ராட்சசன், பேசாமல் ஒரு சாட்சியிடம் இதற்கான நியாயத்தைக் கேட்பது என்று முடிவு செய்தான்.

    அக்னியின் தீர்ப்பு

    அக்னி தேவனை சாட்சியாக அழைத்தான் புலோமன். ‘அக்னி தேவா! எல்லா இடத்திலும் எப்போதும் நீ இருந்து, அங்கு நடந்தவற்றை எல்லாம் கவனிக்கிறாய். ஆகவே, நீ நியாயத்தைச் சொல். புலோமைக்கு முதலில் உரிமையானவன் நானா?, இல்லை அந்த பிருகு முனிவரா?’ என்று கேட்டான்.

    அங்கு தோன்றிய அக்னி தேவன், அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சிறிது தயங்கினான். பின்பு, தன் சலனங்களை நீக்கி விட்டு, பதில் சொல்ல ஆரம்பித்தான்.

    ‘புலோமா! சாஸ்திர முறைப்படி இவள் தந்தை இவளை பிருகு முனிவருக்கே மணமுடித்தார். ஆனால் இவள் தந்தை, இவளது சிறுவயதில் இருந்தே ‘ராட்சசா, நீ இவளைப் பிடித்துக் கொள்’ என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், இந்த உண்மையை நான் சொன்னது தெரிந்தால், பிருகு முனிவர் என்னைச் சபித்து விடுவார். இருந்தாலும், என்னால் பொய் கூற முடியாது. நீயே புலோமைக்கு முதல் உரிமையானவன்’ என்று நியாயம் கூறினார்.

    இதைக் கேட்ட புலோமன், மிகவும் மனம் மகிழ்ந்தான். உடனே புலோமையைத் தூக்கிக் கொண்டு ஆகாய மார்க்கமாகப் பறக்க ஆரம்பித்தான்.

    போகும் வழியில், புலோமையின் வயிற்றிலிருந்த குழந்தை, தன் தாயின் நிலைமையை உணர்ந்தது. கோபம் கொண்டு, கர்ப்பத்திலிருந்து வெளியே வந்தது.

    தங்க நிறத்தில் ஜொலித்த அந்தக் குழந்தையைக் கண்டதும், புலோமனுக்கு பயம் ஏற்பட்டது. தான் சுமந்திருந்த புலோமையை, அப்படியே கீழே போட்டு விட்டு, அங்கிருந்து பறந்து சென்றான்.

    முனிவரின் சாபம்

    கண்ணில் நீருடன், கையில் குழந்தையுடன் மீண்டும் ஆசிரமத்துக்குப் புலோமை வந்து சேர்ந்தாள். அங்கிருந்த பிருகு முனிவரிடம் புலோமன் பற்றிய விவரங்களைக் கூறி அழுதாள். அவளைத் தேற்றிய பிருகு முனிவர், ‘இந்த உண்மையை அவனுக்கு நிச்சயப்படுத்தி சொன்னது யார்?’ என்று கேட்க, புலோமை ‘அக்னி பகவான்தான் இதைச் சொன்னார்’ என்றாள்.

    கோபம் கொண்ட பிருகு முனிவர் அக்னியைப் பார்த்து, ‘இப்படிச் சிறு வயதில் நடந்த விஷயத்தை வைத்து, நீ சொன்ன நியாயம் தவறானது. எனவே, இனி நீ உன் பொறுப்பான தன்மையை மீறி, எல்லாவற்றையும் கபளீகரம் செய்யும் தீயவனாக ஆகக் கடவாய்’ என்று சபித்தார்.

    பின்பு பிரம்மதேவரின் தலையீட்டால் சாபம் நீங்கப் பெற்ற அக்னி, தன் பழைய தன்மையை அடைந்தான்.

    ராட்சசன் வரட்டும், வராமல் போகட்டும். ஆனால், குழந்தைகளைத் தேவையில்லாமல் பயமுறுத்தி அவர்களுக்குள்ளேயே ஒரு ராட்சசன் உருவாகாமல் பார்த்துக் கொள்வது எல்லாப் பெற்றோரின் கடமை.

  • #2
    Re: ‘ஏய் பூச்சாண்டி! இங்க வந்து இவன பிடிச்சிட&

    இப்போதெல்லாம் அம்மாதிரி சொல்லும் பெற்றோர்கள் இல்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் இதை எல்லா பெற்றோர்களும் கவனத்தில் கொள்வது சால சிறந்ததே.

    Comment

    Working...
    X