Announcement

Collapse
No announcement yet.

இதெல்லாம் நம்ம கடமை பாஸ்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இதெல்லாம் நம்ம கடமை பாஸ்!

    => தங்களின் கடமையை வேறு ஒருவர் செய்வதைப் பார்க்கும்போது குற்ற உணர்ச்சி வரவேண்டும். ஆனால் பலர் தனக்கு வேலை மிச்சம் என்று குதூகலம் அடைவது கொடுமை.

    => கடமையை செய்பவர்கள் பலனை மட்டுமல்ல, பாராட்டு உட்பட வேறு எதையும் எதிர்பார்க்கக்கூடாது. அப்போதுதான் கடமையை முழு ஈடுபாட்டுடன் செய்ய முடியும்.

    => கடன் வாங்கியவர் அதைக் திருப்பிக் கொடுப்பது தனது கடமை என்பதை மறப்பதால்தான், கடன் கொடுத்தவர் திரும்பத் திரும்பக் கேட்பதை தனது கடமையாக்கிக்கொள்கிறார்.

    => பலர் தங்களின் கடமைகளும், பொறுப்புகளும் என்னென்ன என்று பட்டியல் போடுவதில் காட்டும் அக்கறையில் ஒரு பகுதி அக்கறையைக்கூட அவற்றைச் செயல்படுத்துவதில் காட்டுவதே இல்லை.
    => ஒருவர் தனது கடமையைச் செய்யும்போது அதை அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து, புகழ் போதையை ஏற்றி அவர்களின் தலைக்கனம் வளர காரணமாகிவிடக் கூடாது.

    => தங்களின் கடமையை செய்துவிட்டு அதைப்பற்றி பிறரிடம் பெருமையாக சொல்லிக்கொள்வது தவறான பழக்கம். பெருமைப்படும்படியான காரியங்களை செய்துவிட்டு அதுவும் தனது கடமை என்று சொல்வது உயர்ந்த பண்பு.

    => பொது இடங்களில் பிறர் துன்பப்படுவதை காண நேரிடும்போது ஒரு 'உச்' மட்டும் கொட்டிவிட்டு வேகமாக கடந்து செல்பவர்களிடம் மனிதாபிமானம் என்பது ஒரு போலி கடமை ஆகிவிடுகிறது.

    => ஒருவர் தனது கடமைகளைச் செய்வதைவிட கஷ்டமான காரியம் என்னவென்றால், மற்றவர்களுக்கு அவர்களின் கடமைகளைப் பற்றி எடுத்துக்கூறி அவர்களை உணரவைப்பதுதான்.

    => கடமையைச் செய்ய மறப்பவர்களை மன்னித்து விடலாம். ஆனால் தனது கடமை இன்னதென்று தெரிந்திருந்தும் அதைச் செய்ய மறுப்பவர்களை மன்னிக்க முடியாது.

    => மற்றவர்கள் அவர்களின் கடமையை நேர்மையான வழியில், நியாயமான முறையில் செய்வதைத் தடுப்பதையே தங்களின் கடமையாக செய்துகொண்டு இருப்பவர்களும் உண்டு.
    > ஒருவர் தனது கடமைகளைச் செய்யாமல் தட்டிக்கழிப்பதும், தனது கடமைகளை செய்ய சொல்லி வேறொருவரிடம் மாற்றி விடுவதும் மிகவும் தவறான பழக்கம்.

    => ஒவ்வொருவரும் அவரவர் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமல் அவர்களை தவிக்கவிட்டுவிட்டு, பின்னாளில் தங்களின் பிள்ளைகள் மட்டும் அவர்களின் கடமையை சரியா செய்ய வேண்டும் என்று நினைப்பது பேராசை.

    => தனது கடமையை செய்துவிட்டு அதையே பெரிய சாதனையாக எல்லோரிடமும் கூறுபவர்கள், தப்பித்தவறி ஏதேனும் எதாச்சும் சாதனை செய்துவிட்டால் பிறகு அவருக்கு அருகில் யாரும் நிம்மதியாக இருக்கவே முடியாது.

    => 'எதையும் கடமைக்கு செய்யாதே' என்று பலர் சொல்வதின் அர்த்தம் 'ஒரு வேலையை ஈடுபாடில்லாமல் அரை மனதுடன் செய்யாதே' என்பதுதான். கடமைகளை சுயநல எண்ணத்துடன் அணுகுவது தவறு.

    > கடமையைச் செய்து முடித்துவிட்டு அலட்சியமாக இருக்கலாம். ஆனால் கடமையை செய்வதில் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது.

    => தான் காதலித்தவரை திருமணம் செய்வது சிலருக்கு சாதனை. சிலருக்கு சோதனை. சிலருக்கு வேதனை. ஆனால், எல்லோருக்கும் அது முக்கியமான கடமை.

    => நமது நம்பிக்கைக்குத் தகுதியான ஆள் தான் இல்லை என்பதை சிலர் ஆரம்பத்திலேயே தானாக முன்வந்து நிரூபித்து விடுகிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லுவதும் நமது கடமைதான்.

    => குடிநீரையும், உணவையும் வீணாக்காமல் இருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. இந்தக் கடமையை குழந்தைகளும் அதைக் கற்றுக்கொள்ளும்படி செய்யவேண்டியதும் நமது கடமைதான்.

    => நாம் நேசிப்பவர்களுக்கும், நம்மை நேசிப்பவர்களுக்கும் செய்யப்படும் உதவியை கடமை என்றும் அன்பை வெளிப்படுத்தும் வேறொரு முறை என்றும் சொல்லலாம்.
    ருத்ரன்
Working...
X