Announcement

Collapse
No announcement yet.

வெண்பா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வெண்பா

    சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
    பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்
    பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால
    நாழி அரிசிக்கே நாம்

    விளக்கம்
    பிறருக்குச் சலாம் போட்டும், அடுத்தவரிடம் சென்று இரங்கி உதவி கேட்டும், உறவுகளை விட்டு அகலமான கடல் கடந்தும், தன் இயல்பான பழக்க வழக்கங்களை மாற்றி தனக்கு உதவி புரியும் மனிதரோடு இணைந்தும், அவர்களை நல்லவர், வல்லவர் என்று பொய்யாகப் புகழ்ந்து பாடியும் வாழ்வது இந்த பாழாய்ப்போன வயிறால் தான், இந்த ஒரு சான் வயிறை நிரப்ப உள்ள நாழி அரிசி சோறு பெறுவதற்காக இத்தனை பாடு பட வேண்டி உள்ளது
Working...
X