Announcement

Collapse
No announcement yet.

brahmanism

Collapse
This topic is closed.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • brahmanism

    If you attack us--------------------------We will attack you with double force.... Backward castes

    If you attack us--------------------------we will see that you are all demolished...Muslims

    If you attack us--------------------------we will see you are all converted to our religion....christians

    If you attack us--------------------------we will show you our tufts and sacred threads to cut off and then run away from the scene.....BRAHMINS

  • #2
    Re: brahmanism

    If you attack us......................................... we will show you our tufts and sacred threads to cut off and then run away from the scene.....BRAHMINS

    ............................but we will give SABHAM TO THE CULPRITS. This is more powerful than

    other methods. You are well aware that one of the powerful sin is getting Sabham from Brahmins,
    which is equivalent to BRAHMA HASTI DOSHAM.

    Comment


    • #3
      Re: brahmanism

      We may tell or curse others but nothing will happen in these kaliyuga period.Every day we are giving tons of sabams to our enemies but nothing seems to affect. Them in a yway.That is the real. Position.Please look into our positions seriously l

      Comment


      • #4
        Re: brahmanism

        Originally posted by P.S.NARASIMHAN View Post
        We may tell or curse others but nothing will happen in these kaliyuga period.Every day we are giving tons of sabams to our enemies but nothing seems to affect. Them in a yway.That is the real. Position.Please look into our positions seriously l
        நிஜம் மாமா ...............நமக்குத்தான் மேலே மேலே கஷ்டம் வருகிறதே தவிர, அவா ளுக்கு இல்லை, நேத்து NVS மாமாவின் பதிவு ஒன்று படித்தேன், நம் பிராம்மணர்கள் எப்படி கஷ்டப்பட்டார்கள் என்று.................அரசாங்கமே நின்று வேடிக்கை பார்க்கும்போது.............என்ன செய்வது?............ரொம்ப கஷ்டமான ஸ்திதி நம்முடையது............அது தான் மூளை உள்ள குழந்தைகள் எல்லோரும் ,ஜாதி பார்க்காமல் தன்னுடைய திறமைக்கு மதிப்பு கொடுக்கும் அயல்நாடுகளுக்கு பறந்து விடுகிறார்கள். அதன் தாக்கம் இப்போ தானே தெரிய ஆரம்பிக்கிறது............இனி வரும் காலங்களில் பாருங்கள் இங்கு இந்தியாவில் Brain Drain வந்துவிடும்........அப்போ புரியும் இவர்களுக்கு நம் அருமை !
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment


        • #5
          Re: brahmanism

          .அப்போ புரியும் இவர்களுக்கு நம் அருமை !
          புரியாமலில்லை மாமி சுயநலம் ,சுயபச்சாதாபம் அவ்ர்கள் கண்களை மறைக்கிறது த்ருதராஷ்ட்ரனைப்போல இதன் முடிவும் அப்படித்தான் இருக்கும்

          Comment


          • #6
            Re: brahmanism

            என்ன இன்னும் புரியவேண்டும்.அவர்கள் நன்றாக புரிந்துகொண்டு இருக்கிரார்கள் இந்த பாப்பார பசங்கள் ஒன்று சேரமாட்டார்கள் என்று.ஆகையால் தான் அடிதடியில் இரங்கிருக்கிரார்கள் நாம் தான் நன்றாக சாப்பிட்டுக்கொண்டு தூங்கி வழிந்துகொண்டு இருக்கிறோம் .எவன் எக்கேடு கெட்டால் என்ன என்ற சுயநலம் தான்..சென்ற ஞாயிறு கூட கும்பகோணம் அருகில் ஒரு குருக்களை அடித்துபோட்டுவிட்டு போயிருக்கிறார்கள்.கேட்பார் இல்லையே. அப்புறம் என்ன திருதராஷ்டிரன் பாண்டவர்கள் கதை.

            Comment


            • #7
              Re: brahmanism

              ஶ்ரீ:
              அனைவருக்கும் மிகத் தாழ்மையான வேண்டுகோள்.
              தங்கள் கோபங்கள் புரியக்கூடியதே,
              ஆயினும் தரக்குறைவான வார்த்தைகளை தயவுசெய்து பயன்படுத்தவேண்டாம்.

              "தினை விதைத்தவன் தினையறுப்பான்
              வினை விதைத்தவன் வினையறுப்பான்"

              "குட்டக் குட்டக் குனிபவனும் முட்டாள்
              குனியக் குனியக் குட்டுபவனும் முட்டாள்"

              ஒரு காலத்தில் ப்ராமணர்கள் ஆஹார நியமத்துடன், சந்தியாவந்தனாதிகளெல்லாம் பண்ணி ஒழுக்க சீலர்களாக இருந்தார்கள்
              அதனால் அவர்கள் இட்ட சாபங்கள் பலித்தன. அடங்கி நடந்தவனை அடக்கி ஆள்வதில் எல்லை மீறியவர்கள்
              இன்று அதன் பலனை அவர்கள் சந்ததியினர் அநுபவிக்கிறார்கள்.

              இன்று ப்ராம்மணர்களில் சந்தியாவந்தனாதிகளுடன் ஒழுக்கசீலர்கள் மிகவும் குறைவு
              அதனால் சாபங்கள் பலிக்க வாய்ப்பில்லை.

              இன்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களாலேயே சில வன்முறையாளர்களை எதிர்க்க இயலவில்லை என்னும்போது
              மிகவு பலவீனமான நம்மால் என்ன செய்ய இயலும்?!

              உதாரணத்திற்கு சென்னை ஐஐடி விவகாரத்தை எடுத்துக்கொள்ளலாம்.
              சரியா, தவறா, தவறு யார்பக்கம் என்பதையெல்லாம் அறியாமல்
              நம் ஜாதியைச் சேர்ந்தவன் என்பதற்காக எந்த விஷயத்திற்கும் ஆதரவளிப்பது,
              போராடுவது, வன்சொற்களை உபயோகிப்பது, பின்விளைவை சிந்தியாது
              போராட்டங்கள் வன்முறைகளில் ஈடுபடுவது இதெல்லாம் மற்றவர்களைப்போல் ப்ராம்மணனால் செய்ய இயலாது
              செய்யவும் கூடாது.

              நல்ல காரணமோ, கெட்ட காரணமோ ஒரு இளைஞனின் பெயரில் வழக்குப் பதிவாகிவிட்டால்
              பின்னர் அவன் உள்நாட்டிலும் நிம்மதியாக வாழமுடியாது, வெளிநாட்டிற்குச் செல்லவும் விசா கிடைக்காது.

              வீரவசனம் பேசுவது, பிறரை நிந்திப்பது விவேகம் ஆகாது!

              "வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியும்
              துணைவலியுந் தூக்கிச் செயல்." - குறள்.

              இதன் பொருள்
              வினை வலியும்= தான் செய்யக் கருதிய வினைவலியையும்; தன் வலியும்= அதனைச்செய்து முடிக்கும் தன் வலியையும்; மாற்றான் வலியும்= அதனை விலக்கலுறும் மாற்றான் வலியையும்; துணை வலியையும்= இருவர்க்கும் தூணையாவார் வலியையும்; தூக்கிச் செயல்= சீர்தூக்கித் தன் வலி மிகுமாயின் அவ்வினையைச் செய்க.

              "அப்படியானால் பிறர் என்ன செய்தாலும் அதைப்பொறுத்துக்கொண்டு போகவேண்டியதுதானா" என்ற கேள்வி எழுமானால்

              அமைப்பு ரீதியாக அமைதியான முறையில் கண்டனத்தைப் பதிவு செய்வது, வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியாக போராட
              இயன்ற ஒத்துழைப்பை நல்குவது போன்ற வகையில்தான் எதிர்ப்பைக் காட்ட இயலும்.

              "துஷ்டனைக் கண்டால் தூர விலகு" என்கிற பழமொழிக்கிணங்க
              நியாயம், தர்மம், சட்டம் இவற்றுக்கெல்லாம் கட்டுப்படாத துஷ்டர்களிடமிருந்து
              விலகி நிற்பதே உணர்ச்சி பூர்வமாய் முடிவெடுக்காமல், அறிவார்ந்த முடிவெடுக்கும்
              அந்தணருக்கு அணிகலனாகும்.

              கொம்புளதற்கு ஐந்து குதிரைக்குப் பத்து முழம்
              வெம்புகரிக்கு ஆயிரந்தான் வேண்டுமே--வம்புசெறி
              தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
              நீங்குவதே நல்ல நெறி.
              --நீதிவெண்பா ௨0

              "கற்க கசடற கற்பவை கற்பின்
              நிற்க அதற்குத் தக" -
              என விவேகமுள்ள, கற்றறிந்தோர் இந்த முடிவினைத்தான் எடுப்பார்கள்.

              குறிப்பு:- 17 வயது முதல் 42 வயது வரை அடியேனும் உணர்ச்சிபூர்வமாகவே சிந்தித்து செயல்பட்டு வந்தேன்.
              நல்ல ஆர்வமுள்ள ப்ராம்மண இளைஞர்களை ஊக்குவித்து, கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளைப் பயிற்றுவித்து
              அவர்களுக்கு பேஜர் (அந்தக்காலத்தில் அதுதான்) சாதனங்களை வாங்கிக்கொடுத்து,
              ப்ராம்மணர்களுக்கு ஆபத்து என்றால் அவர்களில் அருகாமையில் உள்ளவரைத் தொடர்புகொண்டு,
              உடனடியாக உதவிக்கு வந்து காப்பாற்றச் செய்யவேண்டும் என்றெல்லாம் திட்டம் தீடடியவன்தான்!!

              இன்று சர்கரை வியாதி போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, உடலாலும் மனதாலும்
              தளர்ந்துபோயுள்ள நிலையில் வீரவசனம் பேசுவதெல்லாம் விவேகம் ஆகாது என்கிற புத்தி வந்துள்ளது.

              தாஸன்,
              என்.வி.எஸ்


              Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
              please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
              Encourage your friends to become member of this forum.
              Best Wishes and Best Regards,
              Dr.NVS

              Comment


              • #8
                Re: brahmanism

                ஶ்ரீ:
                “ஈக்கு விடம் தலையில் எய்து மிருந்தேளுக்கு
                வாய்த்தவிடம் கொடுக்கில் வாழுமே - நோக்கரிய
                பைங்கணரவுக்கு விடம் பல்லளவே துர்ச்சனருக்(கு)
                அங்க முழுதும் விடமே யாம்” (எய்தும்= சேரும்; பைங்கண்: நீர்த்துளிகள் நிரம்பிய பளபளக்கும் கண்கள்; அரவு= பாம்பு, துர்ச்சனர்=தீயவர், அங்கம்=மனித உடலிலுள்ள உறுப்பு)


                தக்ஷகஸ்ய விஷம் தந்தே மக்ஷிகாயா விஷம் சிர: |
                விருச்சிகஸ்ய விஷம் புச்சம் சர்வாங்கே துர்ஜனே விஷம் ||

                பொதுவான கருத்து: ஈக்கு விஷம் அதன் தலையிலிருக்கும். தேள் (நட்டுவாக்காலி)க்கு விஷம் அதன் கொடுக்கிலுள்ளது. பசுமையான ஒளிரும் கண்களோடு கூடிய பாம்பைப் பார்த்தாலே பயம் ஏற்படும். அப்பாம்பின் விஷம் பற்களில் இருக்கும். ஆனால் தீயவர்களுக்கு உடல் முழுவதும் விஷம் வியாபித்திருக்கும். அத்தீயவர்களை விட்டு விலகி இருத்தலே நன்மை பயக்கும் என்பது அர்த்தம்.



                शकटं पञ्चहस्तेषु तशहस्तेषु वाजिनम् ।
                गजं हस्तसहस्रेषु दुर्जनं दूरतस्त्यजेत् ॥
                ---~नीतिसारः 24


                வடமொழி: “சகடம் பஞ்ச ஹஸ்தேஷு; தசஹஸ்தேஷு வாஜிதம்
                கஜம் ஹஸ்த சஹஸ்ரேண துஷ்டம் தூரேண வர்ஜயேது ||
                “கொம்புள்ள ஆடு, மாடு போன்ற பிராணிகளிடமிருந்து ஐந்து முழ தூரம் விலகியிருக்க வேண்டும்; குதிரையை விட்டுப் பத்து முழ இடைவெளியிலும், கோபமடையும் யானையை விட்டு ஆயிரம் முழ தூரம் விலகியும் இருக்க வேண்டும். ஆனால் துஷ்டத்தனம் மிகுந்த கெட்டவர்களின் கண்களிலேயே படாமல் விலகி இருந்தாலே நன்மைகள் கிடைக்கும்.”


                Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                Encourage your friends to become member of this forum.
                Best Wishes and Best Regards,
                Dr.NVS

                Comment


                • #9
                  Re: brahmanism

                  //வடமொழி: “சகடம் பஞ்ச ஹஸ்தேஷு; தசஹஸ்தேஷு வாஜிதம்
                  கஜம் ஹஸ்த சஹஸ்ரேண துஷ்டம் தூரேண வர்ஜயேது ||
                  “கொம்புள்ள ஆடு, மாடு போன்ற பிராணிகளிடமிருந்து ஐந்து முழ தூரம் விலகியிருக்க வேண்டும்; குதிரையை விட்டுப் பத்து முழ இடைவெளியிலும், கோபமடையும் யானையை விட்டு ஆயிரம் முழ தூரம் விலகியும் இருக்க வேண்டும். ஆனால் துஷ்டத்தனம் மிகுந்த கெட்டவர்களின் கண்களிலேயே படாமல் விலகி இருந்தாலே நன்மைகள் கிடைக்கும்.”//

                  நல்ல விளக்கம் மாமா.....நன்றி !


                  என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                  http://eegarai.org/apps/Kitchen4All.apk

                  http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                  Dont work hard, work smart

                  Comment


                  • #10
                    Re: brahmanism

                    "ஒழுக்கசீலர்கள் மிகவும் குறைவு.அதனால் சாபங்கள் பலிக்க வாய்ப்பில்லை."

                    தங்களின் இந்த கருத்துக்கு எனது அபிப்பிராயம் : "நல்லார் ஒருவர் இருந்தால் ,
                    அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை " என்ற வாக்குக்கு இணங்க ,
                    அந்த மிக குறைந்த பிராமணர்கள் வாக்குக்கு விலை உண்டு .
                    சாபம் பலிக்கத்தான் செய்யும் என்று நம்புகிறேன்.

                    Comment


                    • #11
                      Re: brahmanism

                      வெளியேற்ற நினைத்தவர்கள் வெளியேறிய கதை


                      தயவுசெய்து முழுவதும் படித்து விட்டு, தங்கள் கருத்தை தெரிவிக்கவேண்டுகிறேன்.


                      இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது.ஒரு கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்த மக்களில் பத்து பேர் மழைக்காக அருகில் இருந்த ஒரு பழைய கட்டிடத்தில் ஒதுங்கினார்கள்.அவர்களில் ஒருவர் ஜோஷ்யர்.அவர் சொன்னார்,''இங்குள்ளவர்களில் ஒருவருக்கு நேரம் சரியில்லை ஆகவே அவர் தலையில் சிறிது நேரத்தில் இடி விழப்போகிறது.''இதைக்கேட்டு அனைவருக்கும் பயமாகிவிட்டது,நேரம் சரியில்லாத ஒருவரால் அவ்வளவு பெரும் பாதிக்கப் படுவதா?அந்த ஆள யார் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? இறுதியில் ஒருவர் சொன்னார்,''இந்த வயதான கிழவன் தான் நேரம் சரியில்லாத மனிதன் போலத் தெரிகிறது.எனவே நாம் அவரை இங்கிருந்து வெளியே விரட்டி விடுவோம்.''அனைவரும் ஆமோதித்தனர்.கிழவர் வேறு வழியில்லாது,இருமிக்கொண்டே மெதுவாக அங்கிருந்து வெளியே சென்று ஒரு மரத்தடியில் நின்று கொண்டார்.அப்போது ஒரு பெரிய இடி இடித்தது. கிழவர் பயத்தில் கண்ணை மூடிக்கொண்டார்.சிறிது நேரம் கழித்து கண்ணைத் திறந்து பார்த்தபோது அந்த பழைய கட்டிடம் இடி விழுந்து தீப் பிடித்து எரிந்து கொண்டிருந்தது.




                      இந்த கதையில் கிழவர் பிராமணன்.


                      அவரை வெளியேற்றி, தங்கள் விதியை தாங்களே தீர்மானித்து கொண்டார்கள்.
                      அதுபோல் நம்மை வெளியேற்ற செய்யும் எல்லா வகை தந்திரங்களும் முடிவில்
                      அவர்களுக்கு எதிராகவே திரும்பும் என்று நாம் நம்புவோம்.


                      அன்புடன் ஜி ஜி மூர்த்தி அய்யர்

                      Comment


                      • #12
                        Re: brahmanism

                        ஸ்ரீ தங்களுடைய விளக்கமும் அதை சார்ந்த ஸ்லோகங்களும் படிக்க மிக நன்றாகத்தான் இருக்கிறது.ஆனால்ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது என்று தங்களுக்கு தெரியாததா.குட்டகுட்ட குனிபவன் முட்டாள் சரி இவன் முட்டாள் என்று தெரிந்துதானே அவன் குனிய குனிய குட்டுகிரான் நீர் சொல்கிறீர் இன்று பிராமணர்களிள் ஒழுக்க சீலர்கள் மிகவும் குறைவு என்று.அடியேன் சொல்கிறேன் ஒழுக்க சீலர்களே கிடையாது.துஷ்டனை கண்டால் தூர விலகு சரி. அதற்காக ஒளிந்துகொள்ளவேண்டுமா. நாம் அவர்களிடம் போவதில்லையே.அவர்கள்தானே நம்மை சீண்டுகிறார்கள்.நமது சமூகத்திலே பல மர்மங்கள் ஒளிந்துகொண்டு இருக்கிறது.தங்கள் பெண்,பிள்ளைகள் மூலம் மற்றைய ஜாதி சமயத்தினரிடம் ஒட்டும் உறவும் வைத்துக்கொண்டு இருப்பவர்களால் தான் நமக்கு இப்படிப்பட்ட கேடுகள் விளைகின்றன.அவர்களிடமிருந்துதான் தூர விலகி இருக்கவேண்டும் சமூகத்திலே பாதி பேர் இப்படிப்பட்டவர்கள்தான். தனக்க ஒரு கண் போனாலும் மற்ற பிராமணனுக்கு இரண்டு கண்ணும் போகட்டுமே என்ற நல்ல எண்ணம்தான். .வேறு என்ன சொல்வது.

                        Comment


                        • #13
                          Re: brahmanism

                          இதில் என்ன பெரிய கருத்து வேண்டிக்கிடக்கிறது.இடியினால் கட்டடம் வீந்ழ்தது அதில் மட்டிகொண்டவர்கள் இறந்தார்கள்.வெளியே போனவர் தப்பித்தார். அவ்வளவுதான்.

                          Comment


                          • #14
                            Re: brahmanism

                            நாம் அவைகளுக்கு தீங்கு செய்தால்தான் அவைகள் நம்மை தீண்டும் இல்லையென்றால் நம்மை ஒன்றும் செய்யாது. ஆனால் நமக்கு எதிர் காலத்தில் என்ன காத்திருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா? தெரியாது .அதற்காக நம்மை காத்துக்கொள்ளகூடாதா.என்னதான் நடக்கும் ? அதையும் தான் பார்க்கபோகிறோம்.

                            Comment


                            • #15
                              Re: brahmanism

                              Originally posted by ggmoorthyiyer View Post
                              "ஒழுக்கசீலர்கள் மிகவும் குறைவு.அதனால் சாபங்கள் பலிக்க வாய்ப்பில்லை."

                              தங்களின் இந்த கருத்துக்கு எனது அபிப்பிராயம் : "நல்லார் ஒருவர் இருந்தால் ,
                              அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை " என்ற வாக்குக்கு இணங்க ,
                              அந்த மிக குறைந்த பிராமணர்கள் வாக்குக்கு விலை உண்டு .
                              சாபம் பலிக்கத்தான் செய்யும் என்று நம்புகிறேன்.
                              தங்கள் கூற்று சரியே ஆனால் தாங்கள் கூறியுள்ள அந்த நல்லார் அவ்வளவு எளிதில் கோபப்படவும் மாட்டார், துர்வாசர் போல வ்ந்தது கோபம் பிடி சாபம் என்று கொடுத்துவிடவும் மாட்டார் அந்த தைரியத்தில் தான் இந்த துஷ்டர்கள் இந்த ஆட்டம் போடுகிறார்கள்

                              Comment

                              Working...
                              X