Announcement

Collapse
No announcement yet.

சம்பாவனை மற்றும் தக்ஷினை வகையறா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சம்பாவனை மற்றும் தக்ஷினை வகையறா

    ஸ்ரீ NVS ஸ்வாமின் தங்களுடைய விரிவான பதிலுக்கு அடியேனின் நன்றி யை தெறிவித்துக்கொள்கிரேன். இருந்தாலும் சிலபல விஷயங்களை விளக்கமாக தெளிவுடன் கூறவில்லை என்றே நினைக்கிறேன்.கீழ்கண்ட சடங்குகளுக்கு நீர் கூறிய சம்பாவனை ஏற்க்ககூடியதே. ஆனால் பலதில் தட்சிணை வகையறா மிகவும் அதிகம் என்றே தோன்றுகிறது.அதில் முக்கியமாக நிச்சயதார்த்தம் .அதில் அதிகபட்சமாக 2 பேர் போதுமே. மந்திரம் கிடையாது, வெறுமனே "வாம்மா-சேவிச்சிட்டு உட்காரும்மா -மாமி மாட்டுபொன்னுக்கு ஆசீர்வாதம் பண்ணுங்கோ -போய் dress பண்ணிண்டு வாம்மா -பெண் வந்தவுடன் மாப்பிள்ளையை கூப்பிடுங்கோ -சேவிச்சிட்டு உட்காருப்பா-சம்மந்தி ஆசீர்வாதம் பண்ணுங்கோ -போய் dress பண்ணிண்டு வாப்பா -வந்தவுடன் சேவிசிட்டு வுட்காருப்பா -மாலை போடுங்கோ.(இதன் நடுவில்) 2 வாத்யார்களும் சம்பந்திகளை கேட்காமல் அவர்கள் இஷ்டப்படி முஹுர்த்த பத்திரிக்கை எழுதி மஞ்சள் இட்டு 2 தட்டில் வைத்து சம்பந்திகளிடம் கொடுத்து ஒருவருக்கொருவர் பத்திரிகையை மாற்றிக்க சொல்லவேண்டியது.இதன் நடுவில் ஒரு வாத்தியார் திடீரென்று 'சரணம் பவித்ரம்'என்று எதோ 2 வரி சொல்லி நிறுத்திவிட்டு வாத்தியார்கள் ஒருவர் மாற்றி ஒருவர் முஹுர்த்த பத்திரிகையை படித்துவிட்டு ஏதோ மஹா பெரிய காரியத்தை செய்துவிட்டது போல் ஒரு பெரிய look கொடுப்பார்கள் . அப்புறம் ஆரத்தி எடுங்கோ என்று சொல்லிவிட்டு 3/4 ஆயிரம் வாங்கிகொண்டு விடுவார்கள் சவாரி.இதுதான் நிச்சதார்தம். ஸ்வாமின் அடுக்குமா இந்த கொள்ளை.பழைய காலத்தில் வூர் கோவிலில் சம்பந்தி ஆத்து இரு பெரியவர்கள் மற்றும் சொந்தங்கள் கூடி இந்த நிச்சதார்த்தை மிக சுலபமாக செய்து விடுவார்கள்..ஆனாலும் உம்மை குறை கூற முடியாது. இந்த மாதிரி ஆட்களை திருத்தவே முடியாது.--மேற் கூறியதை அடியேன் எனது சொந்தகாரரோருவரின் நிச்சதார்தின் போது கண்டதை அப்படியே repeat செய்து இருக்கிறேன் நீர் கூறிய 4000-10000 ஒரு பகல் கொள்ளையே தான் .

    அடுத்து..
    சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் தட்சிணை மிக்க சரியே. ஆனால் ஒரு விளக்கம் தேவை 4 ஸ்வாமிகள் என்று சொன்னீர். இது பிரதம சுவாமிகளை தவிர் த்துதானே. அதாவது 1+1+3=5 ஸ்வாமிகள் தான் அதிலும் ஒருவர் ஸ்மார்த்த சுவாமிகளாக இருக்கவேண்டும் என்று சொல்வார்கள்.மற்றைய 4 ஸ்வாமிகளிடமும் நன்றாக வேலை வாங்கி விடுவார்கள் .
    அடுத்து ..
    அடியேனுடைய கனிஷ்ட குமாரன் க்ருஹப்ரவேசம் சென்றபோது காஞ்சியிலிருந்து ஒரு பெரிய சுவாமி +4 சுவாமிகளுடன் வந்திருந்து எல்லோரும் போற்றும்படி கணபதி ஹோமம்-வாஸ்து ஹோமம்-நவக்ராஹசாந்தி ஹோமம் -நாந்தி ஹோமம்-தன்வந்திரி ஹோமம் -ஆயுஷ் ஹோமம் -கடைசியில் லகு படம் வைத்து சுதர்சன ஹோமம் சுமார் 5.1/2 மணிநேரம் செலவிட்டு 12500/= வாங்கிகொண்டார். இதில் அவரே காஞ்சியிலிருந்து எல்லா ஹோம சாமான்களையும் ஒன்று விடாமல் வாங்கி வந்து விட்டார்.அந்த பட்டியலில் 600/= ரூபாய் அதிக மானதை கொடுத்துவிட்டோம்.மேலும் புதிய வீட்டிற்கு புண்யாவசனம் செய்த வகையில் 500/= தனியாக கொடுத்தோம்
    அப்படீருக்கும்பொது உம கூர்ட்டு படி 2 ஸ்வாமிகள் என்ன செய்வார்கள்.விளக்கவும் மொத்த வைதீக செலவே 13600/=+400/= 14000/=
    அடுத்து..

    விவாஹம் : உம்முடைய குறைந்த பட்ச தொகையில் 37000/= ரூபாயில் ஒரு சிறிய அளவில் கல்யாணத்தை முடித்துவிடலாம் போல இருக்கிறதே.தாங்கள் கூறிய குறைந்த பட்ச தொகை ஒரு சில சடங்குகளைதவிர மற்றதெல்லாம் 25% முதல் 50% அதிகமே.இப்படி கூரியதர்க்கு அடியேனை க்ஷமிக்கவும் .

  • #2
    Re: சம்பாவனை மற்றும் தக்ஷினை வகையறா

    ஶ்ரீ:
    எவரையும் க்ஷமிக்கக்கூடிய அருகதை அடியேனுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
    தட்சிணைகள், ஸம்பாவனைகள், கூலி, பீஸ், சார்ஜ் என எந்த வகையில் பார்த்தாலும்
    கொடுப்பவர்கள் பார்வையில் அநியாயமாகத்தான் தோன்றும். என்ன செய்வது?

    நாங்கள் கிராமத்தில் இருந்தபோது, கீரைகள், சில காய்கள் போன்றவை யாரும் விலை கொடுத்து வாங்கியதே கிடையாது
    இங்கு மாவிலையைக்கூடி விலை கொடுத்து வாங்கவேண்டியுள்ளது.

    வைதீகம், வாத்யார் என்பதும் ஒரு ப்ரொபஷன், அவரவர் ப்ரபொஷனுக்கு அவரவர்தான் பீஸ் நிர்ணயம் செய்யவேண்டும்
    ஒவ்வொரு டாக்டர் ஒவ்வொரு பீஸ் வாங்குகிறார். இன்னமும் 5 ரூபாய், 10 ரூபாய் வாங்கக்கூடிய டாக்டர்களும் இருக்கிறார்கள்.

    அதுபோல் வைதீகத்திலும் குறைவாக வாங்கக்கூடியவர் எங்கிருக்கிருக்கிறாரோ பார்த்து கண்டுபிடித்து ஏற்பாடு செய்துகொள்ளவேண்டியதுதான்.

    டாக்டர்கள், வக்கீல்களுக்கு அதிகம் வருமானம் வருகிறதென்று பணத்துக்கு ஆசைப்பட்டவர்களெல்லாம் டாக்டருக்கும், வக்கீலுக்கும் படிக்க வைத்தார்கள்.

    அபூர்வராகங்கள் படத்தில் நாகேஷ் டாக்டர் - அவரிடம் மருத்துவம் பார்க்கவரும் கவிஞர் கண்ணதாசனிடம் தன்னைப்பற்றி புகழ்ந்து ஒரு சில வரிகள் பாடும்படி கேட்பார்
    கவிஞரும் கீழ்க்கண்டவாறு அவரைப்போற்றி 4 வரி பாடுவார்.
    அருமருந்துகள் போன்றவர்தமிழ் அரசராம் திருவள்ளுவர்
    பெருமருந்து உயர்பக்தி என்பதைப் பெரியவர்பலர் பேசுவர்
    சுரமருந்தென எதனையோதரும் சூரி என்ற மருத்துவர்
    கரிமெலிந்தது போல்மெலிந்தவர் கால காலங்கள் வாழ்கவே !


    கடைசியில் கவிஞரிடம் நாகேஷ் டாக்டர் பீஸ் கேட்பார், ஏது பீஸ் இப்ப பாடினேனே அதுதான் பீஸ் என்று சொல்லிவிட்டுப்போய்விடுவார்.
    எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் ஆசுகவியாக யார்வேண்டுமானாலும் கவி சொல்ல இயலுமா?

    அதுபோல்,
    வேதம் பயில்வது ஒன்றும் அவ்வளவு சுலபமான விஷயமல்ல, கற்ற வேதத்தை மறந்துபோகாமல் தேவையான இடத்தில் தேவவாயான வரிகளைச்
    சொல்வதென்பது அதனினும் அரிதாகும். தமிழர்களாகிய நாம் திருக்குறள், நாலடியார், பாரதியார் பாடல்கள் என எத்தனேயோ மனப்பாடப்பகுதிகள்
    கற்றோம், இன்று ஒன்றாவது நினைவிருக்கிறதா?!
    தினமும் சொல்லும் நித்யாநுஸந்தானத்தையே (திருப்பல்லாண்டு கூட) பலபேரால் பார்க்காமல் சொல்ல இயலாது.
    30 வருடமாக பித்ருக்களுக்கு தர்பணம் செய்து வருபவரிடம், ஆவாஹன மந்திரத்தை மட்டுமாவது ஸ்வர சுத்தமாகச் சொல்ல இயலுமா என கேட்டால் இயலாது என்பார்.
    முடிந்தால் ப்ராம்மணர் யார் வேண்டுமானாலும் முயற்சித்து வேதத்தைக் கற்று
    கிடைத்த இடத்தில் கொள்ளை அடிக்கலாமே?! யாரும் தடுக்கவில்லையே.
    வேதம் கற்ற விற்பன்னர் எதுவும் வேலைசெய்யவேண்டிய அவசியமில்லை, ஸபையில் வந்திருந்தாலே ஸம்பாவனை செய்து நமஸ்கரிக்கவேண்டும் என்பதே மரபு.

    அடியேனுக்கு தேவரீரிடம் எந்த மாறுபட்ட எண்ணத்திலும் இதை எழுதவில்லை,
    ஆனால், மற்றவர்களின் நிலை, மற்றவர்கள் என்ன நினைக்கக்கூடும் என்பதைப்பற்றி சிந்தனையின்றிதான் தேவரீருடைய பல பதிவுகளும் உள்ளன.
    அந்த வகையில் அடியேன் என்.வி.எஸ் என்பதை தவிர்த்து ஒரு வைதீகனின் பார்வையில் இதை பதிவிட்டுள்ளேன் என்று தேவரீர் தயவுசெய்து இதை அந்தக்கோணத்தில்
    பார்க்கவேண்டுமாய் விண்ணப்பித்துக்கொள்கிறேன்.
    தாஸன்,
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X