அனைத்து கிரகங்களும், நன்றாக அமைந்திருந்தால், ஒரு மனிதனின் பூரண ஆயுள்-120 வருடங்களாகும். ஆயுளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை 1 அற்பஆயுள் :-1 முதல் 32 வயதுவரை. 2.மத்திம ஆயுள்:- 33 முதல் 60 வரை. 3 பூரணஆயுள்:-61 முதல்120 வயது வரை. இதை எப்படி தெறிந்துகொள்வது ?
லக்னாதிபதி, அஷ்டமாதிபதி, தசமாதிபதி- மூவரும் பலம் பெற்றிருந்தால், பூரண ஆயுள். இருவர் மற்றும், பலமாக இருந்தால், அதில் பாதி - 120/2= 60 வயது. ஒருவர் மட்டுமே பலம் பெற்றிருந்தால், அதிலும் பாதியாம்-அதாவது 60/2=30 வயது. ஒருகால், மூவருமே பலவீனமாகில், பால அரிஷ்டம், யௌவன அரிஷ்டம், அல்லது கெளமார அரிஷ்டம், முறையே, 1 முதல், 12 வயது வரை, 13 முதல், 20 வயது வரை அல்லது 21 முதல் 32 வயது வரை.
பொதுவாக 3, 8ம் வீடுகள் ஆயுளைக் குறிக்கும். இது தவிற, சனி ஆயுள் காரகனாவார். இவ்விரண்டு வீடுகளும், பலமாக இருந்து,அதன் அதிபதிகள், சுபர் பார்வையும் பெற்றால், நிச்சயமாக, நீண்ட ஆயுளைக் குறிக்கும். சனியும், 8ம் வீட்டோனும் கூடினால், நீண்ட ஆயுள். ஒருகால், இவை, சுபர் பார்வை பெற்றால், தீர்காயுள், என கூறமுடியும்.
லக்னத்திற்கு 8 மிடமும், அதற்கு 8 மிடமுமாகிய 3 மிடமும், ஆயுள் ஸ்தானமாகும் . ஆயுள் ஸ்தானத்திற்கு 12மிடம், விரய ஸ்தானமாகும். அதாவது ஆயுளுக்கு விரய ஸ்தானம்- இதை மாரக ஸ்தானமெனவும் கூறலாம். 8க்கு 12= 7 மிடம். 3க்கு 12= 2. . இதனால்தான், பல இடங்களில், 2, 7, மிடங்களை மாரக, ஸ்தானம், அசுப ஸ்தானம் என கூறுகிறோம்.
இதைப்போலவே மீதமுள்ள 11 பாவங்களுக்கும், 12 மிடம் , விரயம் ( அந்த பாவத்திற்கு ) , எனத் தெறிந்து கொள்ளவும். எந்த பாவாதிபதியும், 12ல் இருந்தால், அந்த பாவத்தின் பலன்கள், குறைந்தே காணப்படும்.
N Ramakrishnan Narayanan