Information
சென்னை சிங்கபெருமாள்கோவில் டு ஸ்ரீபெரும்புதூர் சாலையில், சிங்கபெருமாள் கோவில் ஸ்டேஷனிலிருந்து சுமார் ஐந்து கி. மீ.தொலைவில் அமைந்துள்ள ஔஷதகிரி எனப்படும் ஆப்பூர் நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் வரும் சனிக்கிழமை நவம்பர் 15 காலை 8.00-8.30 மணியளவில் மகா சுதர்சன ஹோமம் நடைபெறவுள்ளது. நண்பர் கார்த்திக் என்பவரின் ஏற்பாட்டின் பேரில் இது நடைபெறுகிறது.
Notice
சுமார் 500 படிகளை கொண்ட இந்த மலைக்கோவிலைப் பற்றி நாம் ஏற்கனவே விரிவான பதிவு புகைப்படங்களுடன் அளித்துள்ளோம். இங்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு நம் தளம் சார்பாக உழவாரப்பணியும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அகத்திய மகரிஷி தவம் செய்த மலை இது
ஹோமத்தில் யாரேனும் கலந்துகொள்ள விரும்பினால் தாராளமாக கலந்துகொள்ளலாம். கட்டணம் எதுவுமில்லை. நீங்கள் கலந்துகொண்டு உங்கள் பெயரிலும் உங்கள் குடும்பத்தினர் பெயரிலும் தாராளமாக சங்கல்பம் செய்துகொள்ளலாம். ஹோமத்தின் நிறைவில் பிரசாதம் உண்டு. (மதிய உணவு).
ஹோமத்திற்கு நீங்கள் ஏதேனும் பொருட்கள் வாங்கிச் செல்ல விரும்பினால், சுத்தமான பசு நெய் & இளநீர் (நன்கு சீவப்பட்ட) இரண்டு வாங்கிச் செல்லவும்.
மலையிலும் மலைக்கு செல்லும் வழியிலும் அனுமனின் வழித்தோன்றல்கள் இருக்கும் என்பதால், இளநீர் உட்பட எந்த பொருட்களையும் அப்படியே எடுத்துச் செல்லவேண்டாம். அவை உங்களிடம் இருந்து பிடுங்கிச் சென்றுவிடும். ஜிப் வைத்த – தோளில் மாட்டும் – பையில் இளநீரை மறைத்து எடுத்துச் செல்லவும். அப்போது தான் அவை ஹோமத்திற்கு பயன்படும். இல்லையேல், வானரங்களிடம் அவற்றை பறிகொடுக்க நேரிடும். உங்கள் பையில் உணவுப் பொருட்கள் இருப்பதை தெரியாமல் எடுத்துச் செல்லவும்.
வானரங்களுக்கு தனியாக பிஸ்கட் பாக்கெட்டுகள் (சுமார் 20 பாக்கெட்டுகள்) வாங்கிச் செல்லலாம். அதையும் ஜிப் வைத்த பையில் வைத்து மூடி எடுத்துச் சென்று மேலே உள்ள குரங்குகளிடம் அளிக்கலாம். (மேலே ஒரு பெரிய கூட்டுக்குடும்பமே இருக்கிறது!) வழியில் பையை திறக்க வேண்டாம். ஆபத்து.
வானரங்களுக்கு தனியாக பிஸ்கட் பாக்கெட்டுகள் (சுமார் 20 பாக்கெட்டுகள்) வாங்கிச் செல்லலாம். அதையும் ஜிப் வைத்த பையில் வைத்து மூடி எடுத்துச் சென்று மேலே உள்ள குரங்குகளிடம் அளிக்கலாம். (மேலே ஒரு பெரிய கூட்டுக்குடும்பமே இருக்கிறது!) வழியில் பையை திறக்க வேண்டாம். ஆபத்து.