Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீதேவி காமாட்சி பஜன்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீதேவி காமாட்சி பஜன்

    ஸ்ரீதேவி காமாட்சி பஜன்

    காமாட்சி காமாட்சி காமாட்சி
    கண் திறந்து பாரம்மா காமாட்சி !

    கசிந்துருகி பக்திசெய்வேன் காமாட்சி - நின்
    கடைக் கண்ணின் அருளுண்டோ காமாட்சி !

    உன்னைவிட்டால் ஒரு தெய்வம் காமாட்சி
    இந்த உலகில் நானும் காணவில்லை காமாட்சி !

    அன்னையவள் எனக்கில்லை காமாட்சி - என்
    அன்னையாக நீயிருப்பாய் காமாட்சி !

    தாமரையே உந்தன் முகம் காமாட்சி - அதை
    தரிசிக்க வந்து நின்றேன் காமாட்சி !

    கண்ணழகைக் கண்டேன் நான் காமாட்சி - என்
    கருத்திழந்து நிற்கின்றேன் காமாட்சி !

    செம்பவளச் சிற்றிதழ்கள் காமாட்சி - அந்தச்
    சிவன் சுவைக்க உற்றதுவோ காமாட்சி !

    வெண் முத்துப் பற்களன்றோ காமாட்சி - அதில்
    விண் கல்லின் ஒளியேனோ காமாட்சி !

    கார்மேகம் குழலொப்பும் காமாட்சி - அதைக்
    கண் குளிரக் காண்கின்றேன் காமாட்சி !

    வெண் சங்கும் கழுத்தொப்பும் காமாட்சி - அதில்
    விண் திங்கள் ஒளிருவதேன் காமாட்சி !

    செங்கரும்பைப் பிடித்த கரம் காமாட்சி - ஒரு
    சிந்துரமாய்ச் சிவக்குதடி காமாட்சி !

    மென் கரத்தில் அமர்ந்த கிளி காமாட்சி - நின்
    மௌனப் பேச்சுத் தோழியளோ காமாட்சி !

    உடையொன்றை உடுத்தியதால் காமாட்சி - உனக்கு
    இடையொன்று உற்றதுவோ காமாட்சி !

    பொன்னிணை உன் முலை பாரம் காமாட்சி - உந்தன்
    மின்னிடையும் தாங்கிடுமோ காமாட்சி !

    நான்முகன் நின் அடிதொழுவான் காமாட்சி - அதை
    நான் தொழவும் அருள்புரிவாய் காமாட்சி !

    சீரடியென் சென்னிவைக்கக் காமாட்சி - நின்
    சார்பிலொரு தவம் செய்வேன் காமாட்சி !

    பாரிலொரு தெய்வத்தைக் காமாட்சி - உன்னைப்
    பார்த்தபின் நான் தொழுவதெங்கே காமாட்சி !
    படுகின்ற பாடெல்லாம் காமாட்சி - உந்தன்
    பதமலரைப் பற்றத்தான் காமாட்சி !

    பாடுகின்ற பாட்டெல்லாம் காமாட்சி - இந்தப்
    பாவியை நீ பார்கத்தான் காமாட்சி !

    பசியொன்றைக் கொடுத்திட்டாய் காமாட்சி - இங்கே
    புசிப்பதற்கு உணவிலையே காமாட்சி !

    ருசியொன்றைக் கொடுத்திட்டாய் காமாட்சி - இனி
    ருசிப்துந்தன் நாமம்தான் காமாட்சி !

    செப்புகின்றேன் நின் நாமம் காமாட்சி - உந்தன்
    சீர் செவியில் சென்றதுவோ காமாட்சி?!

    துன்பமெல்லாம் நீக்கிடுவாய் காமாட்சி - நின்பதம்
    துய்ய வழியருள்வாய் காமாட்சி !

    இன்பமெல்லாம் எமக்கருள்வாய் காமாட்சி - உனை
    தினம் தினமும் நாம் தொழுவோம் காமாட்சி !

    காமாட்சி பஜன் சொல்வார் காமாட்சி - இனி
    கழு பிணியின் கரம் பற்றார் காமாட்சி !!

    காமாட்சி காமாட்சி காமாட்சி
    கண் திறந்து பாரம்மா காமாட்சி !




    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS
Working...
X