54. நீ1யாதி பரம்பரமு நின்னவே யுலகங்கள்
ஆயாத சமயமுநின் 2னடியவே யயலில்லை
தீயாரி னொளித்தியால் வெளிநின்றாற் றீங்குண்டோ
வீயாத பெரு3மாயை விளையாட்டும் வேண்டுமோ.
(இ-ள்) ஆதி பரம்பரம்உம் - முதன்மையாகிய மேலான கடவுளும், நீ - நீயேÆ’ உலகங்கள் - எல்லாவுலகங்களும், நின்ன ஏ - உனக்குக் கீழ்ப்பட்டவையேÆ’ ஆயாத சமயம்உம் - ஆராய்ந்தறிதற்கு அரிய எல்லாமதங்களும், நின் அடியஏ - உன்னைக் காரணமாய்ப்பற்றியவையேÆ’ அயல் இல்லை - வேறு இல்லைÆ’ (அங்ஙனமிருக்கவும்), தீயாரின் ஒளித்தி - வஞ்சகர்களைப்போல ஒளிக்கின்றாய்Æ’ வெளி நின்றால் - (அங்ஙனம் ஒளியாது) வெளிப்பட்டு நின்றால், தீங்கு உண்டு ஓ - (உனக்குத்) தீமை உண்டோ?வீயாத - அழியாத, பெருமாயை விளையாட்டுஉம் - பெரிய மாயையாகிய விளையாட்டும், (உனக்கு), வேண்டுமோ? (எ-று)
பராத்பரமென்றது, பரம்பரமென வந்ததுÆ’ சிறந்ததினுஞ்; சிறந்ததென்பது பொருள். நின்னஏ - உன் சுவரூபமானவையே யென்றுமாம். வானத்தினின்றும் பெய்கின்ற மழைநீ ரெல்லாம் கடலையே கலக்குமாறுபோல, எத் தேவர்களைக் குறித்துச் செய்கின்ற வந்தனை வழிபாடுகளும் சருவேசுவரனையே சேருமாதலால், „ஆயாதசமயமு நின்னடியவே… என்றான். ‘நெஞ்சிற் கரவுடையார் தம்மைக் கரப்பர்†என்றபடி „தீயோரே தம்மைக் கரக்க வேண்டியவர்: ஒளித்திருக்க வேணுமென்பதற்கு உனக்குயாதொரு காரணமும் இல்லை: அவ்வாறு இருந்தும் உன்னை வெளிக்காட்டாது ஒளித்திருக்கும் இந்த மாய விளையாட்டு ஏற்றுக்கு?… என்று வினாவும் முகத்தால் ஈசுவரனது மாயையின் மகிமை கூறப்பட்டது. „தீயாரின்… என்னும் உபமானத்தில் பழிப்பினால் புகழ்ச்சிதோன்றுமாறு காண்க. இனி, தீயவர்க்கு ஒளிக்கிறாயெனவுமாம். பி-ம்:- 1ஆதிப்பரப்பிரம்மம். 2அடியனவே. 3மாயவிளையாட்டும்.