ஒரு சமயம் ஒரு நல்லவர் தெருவழியே போய்க்கொண்டிருக்கும்போது ஒரு சித்த ஸ்வாதீனமில்லாதவர் இறைவனிடம் "கடவுளே எனக்கு ஒரு 10 ரூபாய் தாரும்" என வேண்டிக் கொண்டிருநதார். அதைக் கண்ட நல்லவர், பாவம் சித்த ஸ்வாதீனம் இல்லாதபோதும் கடவுள் நம்பிக்கையுடனிருக்கிறாரே, அவரது நம்பிக்கையைக் காப்பாற்ற நாம் ஏதாவது தர்மம் செய்வோம் என எண்ணி, பார்த்தபோது பாக்கெட்டில் 5 ரூபாய் இருந்தது, அதை எடுத்து அந்த சித்த ஸ்வாதீனம் இல்லாதவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்.
மறுதினமும் அந்தவழியே சென்றபோரு அதே சித்த ஸ்வாதீனம் இல்லாதவர் அன்றும் இறைவனிடம் மன்றாடிக்கொண்டிருந்தார். இந்த நல்லவரைப்பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டார். அதுகண்ட நல்லவருக்கு விசித்ரமாக இருந்தது, அருகில் சென்றார்.
அந்த சித்த ஸ்வாதீனம் இல்லாதவர் இறைவனிடம் கூறிக்கொண்டிருந்தார் "கடவுளே எனக்கு ஏதேனும் உதவி செய்வதாக இருந்தால், நீரே நேரடியாகச் செய்யும், வேறு யாரிடமாவது கொடுத்தனுப்பினால் அதில் பாதியை அவர்கள் எடுத்துக்கொண்டுவிடுகிறார்கள்" என்று.
நாம் தகுதி அறியாமல் செய்த உதவியை எண்ணி வருந்திக்கொண்டே சென்றாராம் அந்த நல்லவர்.
இந்தக் கதையை யாரேனும் எங்கேனும் கேட்டிருந்தால்
தயவுசெய்து தெரிவிக்கவும்.