Announcement

Collapse
No announcement yet.

Sadhbhishegam-Details Required?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sadhbhishegam-Details Required?

    Sadhbhishegam-Details Required?
    What are the rituals to be followed to celebrate the completion of 80 years ? Is there any difference for those following saivisam and vaishnavisam ?Can we celebrate it on the day itself or it can be celebrated before competion of 81 years? Please enlighten me in this regard.
    yours,
    murali k
    mkswami32@yahoo.co.in

  • #2
    Re: Sadhbhishegam-Details Required?

    Following are some acceptable information found :
    எந்த வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு சதாபிஷேகம் செய்யவேண்டும் எங்கே? எப்படி? (வீட்டிலா கோவிலில்லா)எந்த விதமான பூஜைகள் செய்ய வேண்டும். சாஸ்திரிகள் வைத்து செய்யும்போது எத்தனைபேர் சாஸ்திகள் இருக்கவேண்டும்.80-வது வயதிலா? 83-வது வயதிலா சதாபிஷேகம் செய்யவேண்டும். சதாபிஷேகதின் போது செய்யவேண்டிய பூஜைகளின் பெயர்கள். செய்யவேண்டிய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் விரிவான விளக்கங்கள் அளிக்கவும்.

    83 வயது ஆனதும் (83 வயதில் 1000 பிறை கண்டிருப்பார்கள் ) எனவே அந்த வயதில் சதாபிஷேகம் என்பதனைச் செய்வார்கள், எந்த வேத சம்பந்தமானவற்றை அவரவர்கள் சொந்த வீட்டிலேயே செய்ய வேண்டும். கோயில் சத்திரம் முதலியவற்றில் வீட்டில் இட வசதி இல்லாதவர்கள் செய்யலாம். அந்த மந்திரங்களின் அதிர்வலைகள் அந்த வீட்டிலேயே வெகுநாட்கள் இருக்கும் என்பது இந்துக்களின் காலம்காலமாக இருந்து வரும் நம்பிக்கை.


    பதினாறு பேறுகளிலே முக்கியமான மூன்று என கருதப்படுபவை: ஆயுள், ஆரோக்யம் மற்றும் ஐஸ்வர்யம் ஆகும். அதிலும் முதன்மையாக ஆயுளையே குறிப்பிடுகிறோம். முன்னொரு காலத்தில் 40 வருடங்கள் மட்டுமே சராசரி ஆயுளாக இருந்த்து. அது சமயம் நீடித்த ஆயுளுடன் வாழுவதை கொண்டாடும் விதமாக சஷ்டியப்த பூர்த்தி மற்றும் சதாபிஷேகம் போன்ற வைபவங்கள் நடைமுறைபடுத்தப்பட்டன.

    இதில் சஷ்டியப்த பூர்த்தி என்பது பொதுவாக 60 வயது பூர்த்தியாகும் தினத்தன்று கொண்டாடப்படுகிறது. இதற்கு, எண்ணிக்கையில் தமிழ் வருடங்கள் 60 என்பதையும், அந்த 60 வருட முடிவில் நம் ஜென்ம நட்சத்திரமும் திதியும் இணைந்து வருபதையும் காரணமாக குறிப்ப்பிடுகின்றனர். இதனால் சஷ்டியப்த பூர்த்தி கொண்டாடும் கால அளவை பொறுத்தவரை இருவேறு கருத்துக்கள் இல்லை.

    ஆனால் இன்றும் சதாபிஷேகம் நடத்த வேண்டிய கால அளவில் சிறிது மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அவசரம் மற்றும் அவசியம் கருதியோ என்னவோ சமீப காலங்களில் சதாபிஷேகம் என்பது 80 வயது முடிவிலேயே கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஏன் என்று தெரியவில்லை. முன்பெல்லாம் சதாபிஷேகம் என்பது 84 வயது பிறந்த தினத்தின் போது தான் கொண்டாடப்பட்டுவந்தது.

    பரமசிவனை வழிபடும் போது, அப்பர் சுவாமிகள் 'பித்தா பிறை சூடி பெருமானே' என்றே அழைக்கிறார். அமாவாசைக்கு மூன்றாவது நாளான 'துவித்யை' திதியன்று தெரியும் பிறை சந்திரனையே பரமசிவன் தன் தலையில் சூடியுள்ளான். இஸ்லாமிய மதத்தவரும் மூன்றாம் பிறை சந்திரனை கண்டபிறகே ரம்லான் நோன்பை முடித்துக்கொண்டு ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். மூன்றாம் பிறை சந்திரனிலிருந்து வெள்ிப்படும் கதிர்கள் அத்துனை சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிற்து. சதாபிஷேகம் என்பது 1008 முறை மூன்றாம் பிறை க்ண்டவர்க்ளை பரம்சிவனகவே பாவித்து கெளரவிப்பதற்க்காக் கொண்டாடப்படுவது. ஆகவே, சதாபிஷேகம் என்பது ஒருவர் பிறந்த நாளிலிருந்து வரும் 1008 'துவித்யை' திதியை கணக்கிட்டு அதன் பின் வரும் ஜென்ம நட்சத்திரத்தன்று கொண்டாடப்பட வேண்டும்.

    பூமியை சுற்றிக்கொண்டே சூரியனையும் சுற்றிவருவதால் சந்திரனின் சுற்றுப் பா தை ஒரு வட்டவளைய சுருள் (காயில்) போல் இருக்கும். சந்திரன் பூமியை ஒரு சுற்று சுற்றிவர ஆகும் காலம் 27.32 நாட்களாகும். இதுவே 27 நட்சந்திரங்களாக பிரிக்கப்படுகின்றன. ஆக்வேதான் நாம் திருக்கோயில்களில் ஒரு வருடத்திற்க்கு நம் நட்சத்திரதிற்க்கு அர்ச்சனை செய்யச்சொல்லி கொடுக்கும்போது 13 அர்ச்சனையாக கணக்கிடுகிறார்கள். இந்த நட்சத்திர சுற்று கால அளவை ஆங்கிலத்தில் 'சைடுரியல் பீரியட்' என்றழைக்கின்றனர்.

    திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். சந்திரனின் திதி சுழற்ச்சியை ஆங்கிலத்தில் 'சைனோடிக் பீரியட்' என்றழைக்கின்றனர். இதற்க்கான கால் அளவு (ஒரு குறிப்பிட்ட திதியிலிருந்து அடுத்த திதி வரை) 29.53 நாட்களாகும். ஒரு வருடம் என்பதை நாம் மிக சரியாக சொல்லவெண்டுமென்றால், அது 365 நாட்கள், 6 ம்ணி, 9 நிமிடம், 9 செகண்டுகளாகும். இதுவே 365.2425 நாட்களாகும்.

    இப்போது சதாபிஷேகம் செய்ய வேண்டிய நாளை கணக்கிடும் முறையை காண்போம்:

    ஃ ஒருவரின் பிறந்த தேதி, நட்சத்திரம், திதி ஆகியவற்றை குறித்துக்கொள்ளவும்.
    ஃ பிறந்த நாளிலிருந்து அடுத்து வரும் 'துவித்யை' திதியை குறித்துக்கொள்ளவும். இது முதல் பிறை நாளாகும். இதிலிருந்து 1008 வது பிறை நாளை கணக்கிடவும்.
    ஃ அதாவது 1007 * 29.53 = 29736.71 நாட்களாகும். இதை முதல் 'துவித்யை' நாளில் இருந்து கூட்ட 1008 வது பிறை நாளை தெரிந்துகொள்ளலாம்.
    ஃ அதன் பிறகு வரும் ஜென்ம நட்சத்திர நாளில் சதாபிஷேகம் செய்ய வேண்டும்.

    இப்போது ஒரு உதாரணத்தை பார்ப்போம்: ராமன் என்பவர் 27.04.1929 ல் பிறந்திருக்கிறார் என்று எடுத்துக்கொள்வோம். அவர் சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரம் தேய்பிறை திருதியை திதியில் பிறந்திருக்கிறார். இவர் பிறந்ததிலிருந்து 14 நாட்கள் சென்ற்பின், அதாவது 11.05.1929 அன்று 'துவித்யை' நாளில் தன் முதல் பிறையின் கதிர்களை அனுபவிக்கிறார். அன்று முதல் ஒவ்வொரு 29.53 நாளிலும் ஒவ்வொரு பிறை கதிர்களில் நீராடி தன் 1008 வது பிறையை 09.10.2010 அன்று தரிசிப்பார். (அதாவது 11.05.1929 லிருந்து 29736.71 நாட்கள் சென்ற பின் தரிசிப்பார். வருடம் 1929 ல் எஞ்சியுள்ள 234 நாட்கள், அதிலிருந்து வருடம் 2010 வரை உள்ள சதாரண மற்றும் லீப் வருட நாட்க்ளை கணக்கில் கொண்டு பார்க்கும் பொழுது 09.10.2010 அன்று தனது 1008 வது பிறையை தரிசிப்பார்) இதற்கு அடுத்து வரும் சித்திரை மாத கேட்டை நட்சத்திர நாளில் (மார்ச் / எப்ரல் 2011) சதாபிஷேகம் செய்வது ஏற்றது.

    இதைக் கொண்டு பார்க்கும் போது 82 வயது பூர்த்தியாகி 83 வது ஜென்ம நட்சத்திர நாளில் செய்ய வேண்டும் என்பது உறுதியாகிறது.
    Also read other replies also to get more information.



    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: Sadhbhishegam-Details Required?

      Following is an opinion of a Sastrigal From Thirukkadaiyur:

      'ஆயிரம் பிறைகண்டவர்' என்று கூறி ஒருவர் நீண்ட காலம் வாழ்ந்ததைப் பெருமையுடன் கொண்டாடுகிறோம். ஆயிரம் முறை பூர்ணமான சந்திரனை தரிசிப்பது பெரும் பாக்கியம். ஆனால் அப்படி முழுமையாக தரிசிக்க எண்பது மூன்று வயது வாழவேண்டும். ஆனால் எண்பது வயது நிறைந்தவுடன் சதாபிஷேகம் செய்து கொண்டாடுகிறோம். இதைப் பேரன் பேத்தி பேத்திமார் நிறைவுடன் செய்வதே சிறப்பானது. அவர்களும் தாத்தா பாட்டியின் திருமண நிகழ்ச்சிகளை மீண்டும் பார்த்து மகிழலாம்.
      சதாபிஷேகத்தில் பரமேஸ்வரன் பிரும்மா விஷ்ணு நவக்கிரஹங்கள் சிரஞ்சீவிகளான பக்த மார்கண்டேயர் ஹனுமன் அஹ்வத்தாமா மஹாபலி வேதவியாசர் விபீஷணர் கிருபாச்சாரியார் பரசுராமர் சப்தரிஷிகள் இந்திராதி தேவர்கள் அஷ்டதிக்பாலகர்கள் ஆயுர் தேவதை நகூஷ்த்திர தேவதை இவர்களை ஆராதனை செய்து ஐபித்த புனித ஐலத்தை தம்பதிகளுக்கு அபிஷேகம் செய்கிறோம்.
      சதாபிஷேகம் செய்து கொள்பவர்கள் பாக்கியசாலிகள். ஆவர்கள் பகவானின் பூரண அனுக்கிரத்தைப் பெற்றவர்கள். அவர்களை தனக்கு மிகவும் பிடித்த 'சகஸ்ரஜீவிகள்' என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார். அவர்கள் உமா மகேசுவரர் ஆகவே மதிக்கப்படுகிறார்கள். அந்த வைபவத்தில் அவர்களை நமஸ்காரம் செய்து ஆசிகளைப் பெறுவது மிகவும் விசேஷமானது. அதனால் அப்படிப்பட்ட தம்பதியரை எல்லோரும் நாடிப் போய் அன்றைய தினம் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து அவர்களுடைய ஆசிகளைப் பெறவேண்டும்.



      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: Sadhbhishegam-Details Required?

        Sri:

        Sri Swami,

        Adiyaen Iramanuja Dasanu Dasan, adiyaen shall start posting the data swami. Adiyaen is much interested in vaishnava sampradayam. shall adiyaen post vaishnava sampradaya details swami? Kindly confirm.

        Note: Adiyaen have to beg devareer swami for vithyai - adiyaen suththa samsaari - devareero parama baagavathar swami.

        Dasanu Dasan

        IRamanuja Sishyan
        www.vainavam.wordpress.com
        www.chethanan.wordpress.com
        Name:
        Email ID:

        Comment


        • #5
          Re: Sadhbhishegam-Details Required?

          ஸ்வாமின்,
          அடியேன் தாஸன்,
          வேஷத்தைப் பார்த்து பாகவதர் என்று முடிவு கட்டிவிட்டீர்களா?
          நம்மாழ்வாரையே நித்யசூரியில் சேர்ப்பதா, ஸம்ஸாரியில் சேர்ப்பதா என்று இன்னும் முடிவு செய்ய முடியவில்லையாம்.
          "அஹமஸ்மி அபராத சக்ரவர்த்தி" என்று ஸ்வாமி தேசிகன் தன்னை(?) கூறிக்கொள்கிறார்.
          நமக்கு அந்தத் துணிவுகூட இல்லை?!!
          வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தைப்பற்றி வெளுத்துக் கட்டும்.
          எந்த ஸம்ப்ரதாயத்தைப் பற்றி வேண்டுமானாலும் இங்கே தாராளமாக எழுதலாம்
          ஆனால் அது ஏதாவது ஒரு ப்ராஹ்மண ஸம்ப்ரதாயமாக இருந்தால் நலம்.
          மற்றபடி, மநுஷனுடைய ஐம்புலன்களுக்கும் (பாலுணர்வற்ற) வேறு எந்த வகையிலும் தீனி போடலாம்.
          "செவிக்குணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்" என்பது போல
          ஸத்தான ஸத் விஷயங்கள் இல்லாதபோது,
          சில முத்தான முகமலர்ச்சி விஷயங்களாவது கிடைத்தால் சரி.
          தாஸன்


          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
          Encourage your friends to become member of this forum.
          Best Wishes and Best Regards,
          Dr.NVS

          Comment


          • #6
            Re: Sadhbhishegam-Details Required?

            Swamin
            Thanx for yr feed back. still there is a confusion prevailing regarding celebration of sathabishekam. According to our achariyas they hv celebrated their thirunakshatram on completion of 80.Now the question arises do we follow what our acharyas hv set as example or shd it be celebrated on the completion of 83 as u say. Sampath kumar

            Comment


            • #7
              Re: Sadhbhishegam-Details Required?

              Sathabhishegam, Shastiabda Poorthi, Abdapoorthi Ayushya homams are not coming under Nithya or Naimithika Karma!
              i.e, If not done there is no papham or dhosham, if done it will help to yield some sort of kshemam like health and fitness to the body and mind.
              Shastra is not rigid for this type of function, So, it can be done either on the completion of 80th year, or after 80th year or on both or on none.
              Note: You have mentioned as your Acharya, without specific details,
              if your Acharya are Gruhastas, you can follow them, if they are Sanyasis, you may not follow that.
              Family Bruhaspathy is the Authorised person to take the final decision like this situation!


              Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
              please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
              Encourage your friends to become member of this forum.
              Best Wishes and Best Regards,
              Dr.NVS

              Comment

              Working...
              X