கோயில்களில் பஞ்ச பேர விதானங்கள் - விளக்கம்
கோயில்களில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்வாமி திருமேனிகளை பேரர்கள் என்று கூறுவர். அவை ஐந்துவிதமாக வகைப்படுத்தப்படுகின்றன.
பஞ்ச பேரர்கள் :- 1. துருவ பேரர் 2.உற்சவ பேரர் 3. ஸ்நபன பேரர் 4. யாக பேரர் 5. பலிபேரர்
1. துருவபேரர் :-
பஞ்ச பேரவிதானத்தில் துருவ பேரமே முக்கியமானதும், பழமையானதுமாகும். மூலவர் திருமேனியை ‘த்ருவ பேரம்” என்று ஆகமங்கள் கூறுகின்றன. இதன் அமைப்பினை ஆகம நு}ல்களும், சிற்ப நூல்களும் வரையறை செய்கின்றன. துருவ பேரர் ஸ்திரமாக பீடத்தில் பொருத்தப்பட்டு அசைவு ஏற்படாதபடி கெட்டியான மருந்துகளால் நிலைநிறுத்தப் படுகிறார். பீடத்திலுள்ள குழியையும் மூலபேரரின் சிலையையும் இம்மருந்து கெட்டியாகப் பிணைக்கிறது. இதற்கு ‘அஷ்டபந்தனம்” என்று பெயர். இதில் எட்டு வகையான மருந்துகள் சேர்க்கப்படுகின்றன.
2. உற்சவ பேரர் :-
திருவிழாக்கள் எடுக்கப்பட்ட காலத்தில் உலா வருவதற்காக ‘உற்சவ பேரர்” உருவாக்கப்பட்டு கருவறையில் மூலவருக்கு முன் பகுதியில் இடம் பெற்றது. இந்த மூர்த்தி செப்பு, பஞ்சலோகம், பொன், வெள்ளி முதலிய உலோகங்களால் அமைக்கப்பட்டது. உபய நாச்சிமார்களின் திருமேனிகளும் அமைக்கப்பட்டன.
3. ஸ்நபன பேரர் :-
திருமஞ்சனம் செய்வதற்கு ஸ்நபன பேரர் திருமேனி அமைக்கப்பட்டது. இவர் திருமஞ்சன மூர்த்தியாவார். இவர்க்கே அபிஷேகங்கள் செய்யவேண்டும் என்று ஆகமங்கள் விதிக்கின்றன. ஆயினும் காலப்போக்கில் உற்சவ மூர்த்திக்கே திருமஞ்சனங்கள் செய்யும் பழக்கம் ஏற்பட்டது. திருமேனியைப் பாதுகாக்க கவசம் அணிவிக்கும் முறை வந்தது.
4. யாகபேரர் :-
ப்;ரம்மோத்ஸவங்கள் போன்ற பெரியவிழாக்களில் திருக்கோயில்களில் யாகசாலை;கள் அமைத்து வேள்விகள் வளர்க்கப்பட்டன. யாக சாi;லக்கு எழுந்தருள ‘யாகபேரர்” என்ற மூர்த்தி தோற்றுவிக்கப்பட்டது.
5. பலிபேரர் :
திசைக் கடவுளர்க்கு பரிபோடும்போது எழுந்தருள ‘பலிபேரர்” என்ற மூர்த்தி செய்யப்பட்டது.
பெருவிழர்களின் இறுதியில் நடைபெறும் தீர்த்தவாரிக்காகச் சக்கரத்தாழ்வார் திருமேனியும் கருவறை மேடையில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. வைகானஸக் கோயில்களில் ‘கௌதுகர்” என்ற திருமேனி இடம் பெற்றது.

Comment