பாஞ்சராத்ர-வைகாநஸ ஆகமங்களும் வேறுபாடுகளும்
ஆகமங்களில் கோயில் தொடர்பான செய்திகள் காணப்படுகின்றன. ஆகம நு}ல்கள் பல உள்ளன. சைவ ஆகமங்கள், சாக்த ஆகமங்கள், வைணவ ஆகமங்கள் எனப் பல வகைப்படும். வைணவ ஆகமங்களாவன வைகானஸமும், பாஞ்சராத்ரமும் ஆகும்.
அ. வைகானஸ ஆகமம் :-
வைகானஸ ஆகமம் என்பது பகவச் சாஸ்திரமாகும். விகநஸ முநிவரால் சொல்லப்பட்டதால் வைகானஸ சூத்திரம் என்று அழைக்கப்படுகின்றது. விகனஸரின் ஸம்பந்தமுற்றோர் வைகானஸர் என்று அழைக்கப்படுவர். இவர் மஹா விஷ்ணுவின் மாநஸ புத்திரர். இவருக்கு மஹாவிஷ்ணு ஸ்ரீவைகானஸ சாஸ்திரத்தை உபதேசித்தார்.
ஆ. வைகானசரும் மற்றைய ஸ்ரீவைஷ்ணவர்களும் :
வைகானசர்கள் பிற்புரிமையால் வரும் சமூகத்தைச் சேர்ந்துள்ளனர். யாவரும் அந்தணர்கள். இவர்கள் ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரையில் சம்பந்தப்படாதவர்கள். அவர்கள் இராமாநுஜரையோ, நம்மாழ்வாரையோ தம் குல குருவாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் திவ்யப் பிரபந்தங்களை அவர்கள் அத்யயனம் செய்வதில்லை. ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யர்களின் தனியன்களை அநுஸந்திப்பதும் இல்லை. பஞ்ச ஸம்ஸ்காரம் எனும் வைஷ்ணவ தீiக்ஷயை இவர்கள் பெறுவதில்லை. அத்தகைய தீiக்ஷயை இவர்கள் கர்ப்ப வாசத்தின்போதே மந்திர ஸம்ஸ்காரத்தால் பெற்றுவிடுகிறார்கள்.
இ. வைகானஸ ஸம்ப்ரதாயம் :
இவர்கள் கொள்கை லக்ஷ;மி விசிஷ்டாத்வைதம் என்று குறிப்பிடப்படுகிறது. இராமாநுஜ ஸம்ப்ரதாயக் கோட்பாடுகளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் பிராட்டியை ஈச்வர கோடியில் சேர்க்கிறார்கள். கைவல்யமும் மோக்ஷமே என்று கருதுகின்றனர்.
ஈ. பாஞ்சராத்ரம் :
பாஞ்ச ராத்ரம் என்றால் ஐந்து இரவுகள் என்று பொருள். ஸத்ர யாகம் ஒன்றில் ஐந்து இரவுகளில் எம்பெருமானை வழிபடும் விதம் உபதேசிக்கப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டதாக சதபத ப்ராஹ்மணத்தில் கூறப்பட்டுள்ளது. இராத்திரியின் குணங்களான மஹாபூதம், தன்மாத்திரை, அஹங்காரம், புத்தி, அவ்யக்தம் என்ற ஐந்தின் காரணமாக இப்பெயர் ஏற்பட்டதாக பரம ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது. சாங்கியம், பௌத்தம், ஆர்ஹதம், காபாலம், பாசுபதம் ஆகிய பஞ்ச சாஸ்திரங்களும் இருளடைந்து போகும்படி செய்ததால் பாஞ்சராத்ரம் என்று பெயர் வந்ததாக பாத்ம தந்திரம் என்னும் நு}ல் கூறுகிறது. ப்ரஹ்மம், முக்தி, போகம், யோகம், ப்ரபஞ்சம் என்ற ஐந்தை அடையும் வழிகளைக் கூறுவதால் இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர். ஆனால் பரம்பொருளின் ஐந்து நிலைகளான பர, வ்யூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை எனும் நிலைகளைப் பற்றிக் கூறுவதால் இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர். அதிலும் வ்யூஹத்தின் நிலையை விளக்குவன பாஞ்சராத்ர ஆகமங்கள் என அழகியமணவாளப்பெருமாள் நாயனார் அருளிச்செய்துள்ளார்.
உ. பாஞ்சராத்ர ஸம் ஹிதைகள் :-
பாஞ்சராத்ர ஸம்ஹிதை சில்ப சாஸ்த்ரம், வாஸ்த்து சாஸ்த்ரம், பல்வேறு தெய்வங்களின் உருவ வர்ணனை, அவர்களின் ஆயுதங்கள், பிம்பங்களின் அளவுகள், ஆராதனை முறை, அண்டங்களின் சிருஷ்டி க்ரமம், யோகம் அதாவது கடவுளை நெருங்குவதற்கான வழிகளை விவரித்தல் ஆகியவை அடங்கியது. இவையனைத்தும் ஜ்ஞானம் (ச்ருஷ்டி முதலியன), யோகம் (கடவுளை அடையும் வழி), கிரியா (ஆலய - பிம்ப நிர்மாணங்கள்), சரியா (பூஜை செய்யும் முறை) என்ற நான்கு தலைப்புகளில் அடங்கும்.
ஸ்ரீ பாஞ்சராத்ர ஸம் ஹிதைகள் 108 என்று பொதுவாகக் கருதப்பட்டாலும், அனைத்தும் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் என்று மூன்று ஸம்ஹிதைகளும் பகவானால் சொல்லப் பட்டதால் ரத்னத்ரயம் என்றும், மூல ஸம்ஹிதைகள் என்றும் சொல்லப்படுகிறது. பௌஷ்கரத்தின் விரிவை பாரமேச்வர ஸம்ஹிதையும், ஸாத்வத்தின் விரிவை ஈச்வர ஸம்ஹிதையும், ஜயாக்யத்தின் விரிவை பாத்ம ஸம்ஹிதையும் தெரிவிக்கிறது. இவற்றுள் ஜயாக்யம் சிறந்ததாகப் போற்றப்படுகிறது. மேலும் 1. அஹிர் புத்ந்ய ஸம்ஹிதை 2.ஈச்வர ஸம்ஹிதை 3. ஜயாக்ய ஸம்ஹிதை 4. பாத்ம ஸம்ஹிதை 5. பாரமேச்வர ஸம்ஹிதை 6.லக்ஷ;மீ தந்த்ரம் 7. விஷ்வக்ஸேந ஸம்ஹிதை 8. ஸ்ரீப்ரச்ன ஸம்ஹிதை 9. ஸாத்வ ஸம்ஹிதை முதலிய ஸம்ஹிதைகளும் உள்ளன.
பாஞ்சராத்ர - வைகானஸ ஆகமங்களின் வேறுபாடுகள்
வைகானஸ ஆகமம் பாஞ்சராத்ர ஆகமம்
1. வைகானஸ ஆகம விதிகளின்படி வைகானஸ ப்ராம்மணர்களே கருவறையிலுள்ள இறைவனுடைய திருமேனியை தீண்ட உரிமை பெறுகிறார்கள்.
2. வைகானஸ அர்ச்சகர்கள் திருவிலச்சினை என்ற பஞ்ச ஸம்ஸ்கார தீiக்ஷ பெறுவதில்லை.
3. குரு பரம்பரையில் ஸம்பந்தப்படாதவர்கள். ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களின் தனியன்களை அநுஸந்திப்பதில்லை.
4. வழிபாட்டு முறையில் மந்திரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
5. பலி பீடத்தின் பின்னால் கொடிமரம் இருக்கும்
6. விஷ்ணு, புருஷன், சத்யன், அச்யுதன், அநிருத்தன் முதலியோர்களை வழிபடுகின்றனர்.
மற்றும் கோயில் அமைப்புக்களிலும் திருவாராதன முறையிலும், மூர்த்தியின் அமைப்பிலும் , து}ப தீபங்கள் சமர்ப்பிப்பதிலும் வைகானஸ, பாஞ்சராத்ர ஆகமங்கள் வேறுபடுகின்றன.
Comment