Announcement

Collapse
No announcement yet.

ஹிந்தியும் வட இந்திய பிரதேச மொழிகளும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஹிந்தியும் வட இந்திய பிரதேச மொழிகளும்

    “‘இந்தி’யத் தேசியத்தின் தோல்வியும் பிஹார்களின் விழிப்பும்” என்ற தலைப்பில் அண்மையில் ஒரு கட்டுரை பார்வைக்கு கிடைத்தது. இது ஃபேஸ்புக்கில் எழுதப் பட்ட கட்டுரையாகையால் பேஸ்புக்கில் இணையாதவர்கள் பார்க்க முடியாது என்பதால் அந்த கட்டுரையின் சில பகுதிகள் இங்கே மீண்டும் பதிகிறோம்:



    information

    Information

    இந்தியா சுதந்திரம் அடைந்த்திலிருந்து பிஹார், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் வளர்ச்சிப் பிரச்சனை குறித்து நாம் அறிவோம். இந்தி பெல்ட் அல்லது பிமாரு (BIMARU) என்ற பெயரில் சற்றே அவமானகரமான உள்ளர்த்தத்தோடு அடையாளப்படுத்தப்படும் இந்த மாநிலங்களில், பிஹார் ஒரு வித்தியாசமான மாநிலம் என்றார் குப்தா. சுமார் ஆயிரம் ஆண்டு காலம் இந்தியாவின் மையமாக இருந்து வந்தது பிஹார்தான் என்றும் பாடலிபுத்திரம்தான் ஒரு காலத்தில் இந்தியாவின் சிந்தனைப் போக்கை நிர்ணயித்தது என்றும் பெளத்தமும் சமணமும் உருவான பூமியான பிஹார் பிறகு தாழ்ந்துபோனது என்றும் அவர் விவரித்தார். ஆனால் 1950களுக்குப் பின் பிஹார் ஏன் ஒரு வளர்ந்த மாநிலமாக மாறவில்லை? இந்தியாவின் கனிம் வளங்களின் தலைமை பீடமாக இருந்துவந்த பிஹார் தொழிலுற்பத்தியில் ஏன் முன்னேறவில்லை?

    சாதியமும் நிலப்புரபுத்துவமும்தான் பிஹாரின் வளர்ச்சிக்கு எதிராக இருந்தன என்று குற்றம்சாட்டிய குப்தா மற்றுமொரு முக்கியமான வளர்ச்சிப் போக்கு பிஹாரில் நிகழாமல் போய்விட்டது என சுட்டிக்காட்டினார். முன்னிரு பிரச்சனைகள் பற்றி நிறைய ஆய்வாளர்கள் பேசியிருக்கிறார்கள். குப்தா பேசத் தொடங்கியிருக்கும் மூன்றாவது முக்கியமான பிரச்சனை பற்றி இப்போதுதான் பிஹார் பேச ஆரம்பித்திருக்கிறது.





    notice

    Notice

    தமிழ்நாட்டில் பார்ப்பன எதிர்ப்பியக்கம் பின்பு ஒரு துணைத்தேசிய இயக்கமாக மாறி தமிழக வளர்ச்சியின் அடிப்படையாக மாறியது என்றார் குப்தா. நாம் தேசிய அல்லது தேசியஇன அடையாளமாக பார்ப்பதை குப்தா துணைத்தேசிய அடையாளமாக பார்க்கிறார். (இது குறித்து தனியே வேறு ஒரு சமயம் விவாதிப்போம்). இத்தகைய துணைத்தேசிய அடையாளத்தை – பிஹாருக்கென்ற சொந்த தேசிய இன அடையாளத்தை – நோக்கி பிஹாரை அதன் தொடக்க்கால அரசியல் தலைவர்கள் அழைத்துச்செல்லாமல் போனதுதான் பிஹார் வளராமல் போனதற்குக் காரணம் என்று குப்தா கருதுகிறார்.





    இந்திய தேசியம் மிகப்பெரிய துரோகத்தை வேறு யாருக்கும் இழைத்திருக்கவில்லை – இந்தி மாநிலங்களுக்கே இழைத்திருக்கின்றது.

    பிஹாரின் கதை மட்டுமல்ல, இந்தி மொழி பேசப்படும் மாநிலங்கள் அனைத்தின் கதையுமே சோக்க்கதைகள்தான்.



    இந்தி மொழி என்பது ஒரு மொழியல்ல. தனித்தனி மொழிகளாகவும் துணைமொழிகளாகவும் பேச்சுவழக்குகளாகவும் இருந்த பல மொழிக் கலாச்சாரங்கள்மீது மேலிருந்து திணிக்கப்பட்ட ஒரு சர்காரி பாஷா அது. அதனூடாக அது வடக்கு, மத்திய இந்தியாவை ஓர் ஒற்றை இந்திப் பிரதேசமாக ஆக்கிமுயற்சி செய்திருக்கிறது. சுதந்திரப் போராட்டக்காலத்தில்கூட உயிரோடு இருந்த பல மொழிகளை சுதந்திர இந்தியா இந்தி என்ற ஒற்றை அடையாளத்தில் கரைத்து ஒழித்துக் கட்ட முயற்சிசெய்துவருகிறது. அந்த வேளை இந்நொடியும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சமஸ்கிருத ஞானஸ்நானம் அளிக்கப்பட்ட ராஷ்ட்டிர பாஷா இந்தியை கட்டாயமொழியாக ஆக்கியபோது, பல கட்டங்களில் தமிழ்நாட்டில் நாம் எதிர்த்தோம். ஆனால் அதனால் பாதிப்பு தமிழ் போன்ற பிற மொழிகள் மீது மட்டும்தான் இருக்கும் என்று நாம் நினைக்கிறோம்.

    ஆனால் உண்மையில் இந்தியால் பாதிக்கப்பட்டவை வடக்கு, மத்திய இந்தியாவில் பேசப்பட்ட சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகள்தான். இவற்றில் இந்தி-உருதுவை விட பல நூற்றூண்டுகால இலக்கிய பாரம்பரியம் உடையவை பல. அவதி, போஜ்புரி, பிரஜ் பாஷா, ஹரியான்வி, மாகதி, மைதிலி, பஹாரி, சாத்ரி என பல மொழிகளினிடத்தை இந்தி அபகரித்துக்கொண்டது.

    வட இந்தியாவில் ஹிந்தியின் ஆதிக்கத்தால் அங்குள்ள பிராந்திய மொழிகளைச்சுற்றி வலுவான அடையாளங்கள் உருவாகவில்லை. அதுவும் அங்கு பொதுவான சமூக வளர்ச்சி குன்றிய நிலைக்குக் காரணம் என்றும் கூறுவது வரை உள்ள வாதம் புரிந்துகொள்ளக் கூடியதே.

    எனினும் மத்திய அரசு அல்லது இந்திய தேசியம் – ஹிந்தியை திணித்து பிற மொழிகளை மேலுக்கு வர முடியாமல் தடுத்தது என்று கூறும் அந்த பார்வை சரியல்ல. மத்திய அரசு ஹிந்தியை வட இந்தியாவில் (முழு இந்தியாவிலும் தான்) திணிக்கவில்லை என்று நான் கருதுகிறேன். அதற்கான காரணங்களை கீழே குறிப்பிட்டுச் சொல்கிறேன்.


    இந்தி எதிர்ப்பு தான் தமிழகத்தில் தமிழை ஓரளவு காப்பாற்றி இருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஆங்கிலம் அதீத முக்கியத்துவத்தை அடைந்து தமிழ் சிதைந்து தமிங்க்லீஸ் ஆகி தாய் மொழியை ஒதுக்கும் நிலைக்கு வந்துவிட்டது; சக மாநிலங்களில் அவரவர் மொழி, பேச்சிலும் இலக்கியத்திலும் மிளிர்ந்துகொண்டிருக்கிறது; அங்கெல்லாம் ஹிந்தியை விரட்டவில்லை! இங்கே ஒண்ணாம் வகுப்பில்கூட தமிழ் இல்லை; அடுத்த தலைமுறை ‘அ’ வேண்டுமா என்று யோசிக்க ஆரம்பித்துவிடும்போல் இருக்கிறது. பொதுவாக, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களால் கூட ஆங்கிலத்திலோ தமிழிலோ ஒரு பக்கம் சரளமாக எழுதமுடியவில்லை. இது மிக அவலம்.



    வடஇந்தியாவைப் பொறுத்த வரை, ஹிந்தியை மத்திய அரசு திணித்தது என்று கருதுவதற்கு இடமே இல்லை. ஹிந்தியை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்த பொழுது மத்திய அரசு மொழிவாரியாக மாநில எல்லைகளை மாற்றியமைத்தது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். அப்படி இருக்க வட இந்தியாவில் மட்டும் ஏன் இதை செய்யாமல் விடுவார்கள்? தென் இந்தியாவில் செய்ததை ஏன் வட இந்தியாவில் செய்யவில்லை என்ற கேள்விக்கான பதில், அன்றைய காலகட்டத்தில் வட இந்தியாவின் மொழிப் பிரக்ஞை அதற்கு ஏதுவாக இல்லை என்பதே ஆகும்.

    ஹிந்தி/உருது என்று நாம் இன்று அழைக்கும் மொழி முதலில் அரபி எழுத்துகளில் எழுதப்பட்ட மொழி. பத்தொன்பதாம் நூற்றாண்டில், இஸ்லாமிய ஆட்சி முடிந்து ஆங்கிலேயர் ஆட்சி துவங்கியவுடன் மக்களிடையே அரபி எழுத்தை கைவிட்டு தேவநாகரி எழுத்துக்களை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால் இதற்கு முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, தேவநாகரியில் எழுதப்படும் ஹிந்திய, அரபி எழுத்தில் எழுதப்படும் உருது என்று ஒரு மொழி இரண்டானது. ஹிந்துக்கள் ஹிந்தியுடன் தங்களை அடையாளத்தை பிணைத்துக் கொண்டார்கள். முஸ்லீம்கள் உருதுவுடன். இதன் காரணமாக வட இந்தியாவின் மொழி பிரக்ஞையில் குழப்பம் உருவாகி விட்டது. தத்தம் தாய்மொழிகளை கைவிட்டு மக்கள் எல்லாவற்றையும் ஹிந்தி/உருது என்று கருத ஆரம்பித்தனர். இது தான், வடஇந்தியாவில் மொழிவாரி மாநில எல்லை சீர்திருத்தம் நடக்காததற்கு முக்கிய காரணம். மக்களுக்கும் சரி, அந்த பகுதியைச் சேர்ந்த தலைவர்களுக்கும் சரி, தங்கள் மொழிகளுக்கு மாநிலம் அமைக்க வேண்டும், அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தோன்றவேயில்லை என்பதே உண்மை. இதில் மத்திய அரசை குறை கூறுவதில் எந்த பயனும் இல்லை. மக்களாட்சி எனும் பொழுது மக்களின் முன்னுரிமைகள் (priorities) தான் அரசில் பிரதிபலிக்கும்.

    இப்பொழுது முழு இந்தியாவிற்கு வருவோம். மத்திய அரசு ஹிந்தியை திணித்தது என்பதே நமக்கு பரிச்சயமான வாதம். ஆனால் என்னைக் கேட்டால் நாம் இன்னும் இதை புதுமையாகக் காண வேண்டும் என்று கூறுவேன். நமது சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் நமது தலைவர்கள் தேசம் என்ற கருத்தை ஐரோப்பாவிலிருந்து கற்றிருந்தனர். அங்கு தேசம் என்பது பெரும்பாலும் மொழிவாரியாக அமைந்ததே ஆகும். இதன் காரணமாக தேசம் என்றால் அதற்கு ஒரு தேசிய மொழி இருக்க வேண்டும் என்ற கருத்து நிலவியது (இன்று கூட நிறைய பேர் ஹிந்தியை தேசிய மொழி என்று கருதுவதற்கு வேர் அங்கு தான் இருக்கிறது).




    இந்தியாவில் நிலைமை வேறு விதமாக இருந்தது. இங்கும் தேசியத்தலைவர்களிடையே ஹிந்தி தேசிய மொழி என்ற ஒரு கற்பிதம் இருந்தது உண்மை தான் என்றாலும், கொஞ்சம் பக்குவமானவர்கள் என்பதாலோ, நம்மிடையே நிலவும் இயற்கையான ஹிந்துத்துவ மனப்பான்மையாலோ, சமரசம் (compromise) செய்து விட்டனர். இதன் காரணமாக தான் மாநில எல்லைகள் சீர்திருத்தப்பட்டது. இன்று நாம் ஓரளவிற்கு மொழிப்பிரச்சனை பெரிய அளவில் வெடிக்காமல், பாகிஸ்தான், இலங்கை போல் இனப்படுகொலை நடக்காமல் முன்னே செல்ல முடிந்ததற்கு இது தான் காரணம்.

    திராவிட அரசியில்வாதிகள் மொழித்திணிப்பு என்று இதைக் காண்பதில் வியப்பு இல்லை. இது அவர்களுக்கு இயற்கையான பார்வை தான். காரணம், அவர்களும் இதே போல் தேசிய மொழி என்று ஐரோப்பாவில் நடந்த மொழி அழிப்பு இந்தியாவிலும் நிகழ்ந்துவிடும் என்று அஞ்சியே இருப்பார்கள். ஆனால் மத்திய அரசு நடந்து கொண்ட விதம் அது ஒரு திணிப்பு என்று நாம் கருத இடமளிக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். தேசம் என்றால் என்ன என்பதில் ஒரு தெளிவின்மை இருந்தததனால் ஏற்பட்ட தேசியமொழிக்கொள்கை, மக்களின் எதிர்ப்பை ஜனநாயக ரீதியாக ஏற்றுக் கொண்டு முதிர்ச்சியடைந்தது என்றே நாம் இன்று வரலாற்றை பார்க்க வேண்டும். இதுவே மத்திய அரசையும் ப்ராந்தியப் பார்வையையும் ஒற்றுமையோடு முன்னே எடுத்துச் செல்ல உதவும்.


    நன்றி: திரு. கார்த்திக் வைத்யநாதன்
Working...
X