Announcement

Collapse
No announcement yet.

Niti-199 சொல்பவரினும் சொல்லப்படுவதே முக்கியம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Niti-199 சொல்பவரினும் சொல்லப்படுவதே முக்கியம்




    युक्ति युक्तं वचो ग्राह्यं बालादपि शुकादपि |
    अयुक्तमपि नग्राःया साक्षादपि बृहस्पते: ||

    யுக்தி யுக்தம் வசோ க்ராஹ்யம் பாலாதபி சுகாதபி|
    அயுக்தமபி நக்ராஹ்ய ஸாக்ஷாதபி ப்ருஹஸ்பதே: ||
    பொருள் :
    ப்ருஹஸ்பதி எனும் குரு பகவானே (அல்லது ஆசார்யனே) கூறினாலும் ஏற்கத் தகாததை ஏற்காமையும்,
    சிறுவனோ, கிளியோ சொன்னாலும் ஏற்கத் தக்கதாயின் ஏற்றுப் போற்றுதலும் அறிவுடைமை ஆகும்.

    திருவள்ளுவர் வாக்கு:

    குறள் 423:
    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

    எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.
    மு.வ உரை:
    எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

    Translation:
    Though things diverse from divers sages' lips we learn,
    'Tis wisdom's part in each the true thing to discern.
    Explanation:
    To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom.
    Last edited by bmbcAdmin; 07-11-12, 17:31.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: Niti-199 சொல்பவரினும் சொல்லப்படுவதே முக்கியம&#30

    ஸ்வாமின் சம்ஸ்க்ருத ஸ்லோகம் அதற்க்கினையான தமிழ் குறள் உண்மையில் மிக நன்று சம்ஸ்க்ருத தமிழாக்கம் முதல் வரி கடைசி வார்த்தை கிளி சம்பந்தப்பத்டதால் பறந்துவிட்டதோ தவறாக என்ன வேண்டாம் தங்கள் ஹாஸ்ய சுபாவம் என்னையும் பற்றிக்கொண்டுவிட்டது

    Comment


    • #3
      Re: Niti-199 சொல்பவரினும் சொல்லப்படுவதே முக்கியம&#30

      ஶ்ரீ:
      சீர் செய்யப்பட்டது,
      மிக்க நன்றி.
      வாழ்க்கையில் ஹாஸ்யம் மிக இன்றியமையாதது.
      ஸம்ஸ்க்ருத ச்லோகங்களின் தாக்கம் பெரும்பாலான தமிழ் காவியங்கள், காப்பியங்களில்
      காணக் கிடைக்கும்.
      தாஸன்,
      என்.வி.எஸ்


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment

      Working...
      X